Header Ads



6 நாட்கள் சமூக வலைத்தளங்களுக்கு தடை - எதற்காகத் தெரியுமா...?


முஹர்ரம் புதுவருடத்தை முன்னிட்டு ஜூலை 13 ஆம் திகதி 18 ஆம் திகதி வரை பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் சமூக வலைத்தளங்களை தடைசெய்ய வேண்டுமென அம்மாகாண சட்டம் ஒழுங்கிற்கான அமைச்சரவை குழு பரிந்துரை செய்துள்ளது.


வெறுப்பு பேச்சு மற்றும் வன்முறை சம்பவங்களை தவிர்க்க இந்த நடவடிக்கையை மேற்கொள்ள இருப்பதாக பஞ்சாப் மாநில அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.


இந்நிலையில் பஞ்சாப் அரசு இதுதொடர்பில் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான மத்திய அரசுக்கு இவ்விடயம் தொடர்பில் கோரிக்கை முன்வைத்துள்ளது. இதற்கமைய பாகிஸ்தானின் மத்திய அரசும் இது குறித்து கவனம் செலுத்துமென எதிர்பார்க்கப்படுகிறது.


பாகிஸ்தான் இராணுவத்தின் தலைமை ஜெனரல் ஆசிம் முனிர் ஏற்கனவே, சமூக வலைத்தளங்களை தீய மீடியா என குறிப்பிட்டள்ளார். அவற்றை டிஜிட்டில் பயங்கரவாதம் என அழைத்த அவர், அதை எதிர்த்து போராடுவது அவசியமென வலியுறுத்தியுள்ளார்.


பஞ்சாப் மாகாணத்தில் சுமார் 12 கோடி மக்கள் வசித்துவருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments

Powered by Blogger.