ஜேர்மனியில் ஈரானுக்கு அதிர்ச்சி - பள்ளிவாசலுக்கும், இஸ்லாமிய மையத்திற்கும் தடை, 53 வளாகங்களில் சோதனை
ஜேர்மன் உள்துறை அமைச்சகம், ஹம்பர்க் இஸ்லாமிய மையத்தை Hamburg Islamic Center (HIC), தடை செய்வதாக அறிவித்தள்ளது.
டஜன் கணக்கான போலீசார் இன்று -24- இமாம் அலி மசூதியை சோதனையிட்டனர். இது நீல மசூதி என்றும் அழைக்கப்படுகிறது
இது ஈரானால் நடத்தப்படுவதாக ஜெர்மன் உளவுத்துறை நம்புகிறது.
Bundesanzeiger செய்தித்தாள் அறிவிப்பின்படி, தீவிர இஸ்லாமிய இலக்குகளை பின்பற்றுவதற்காக ஜேர்மன் அதிகாரிகள் ஹாம்பர்க் இஸ்லாமிய மையம் மற்றும் தொடர்புடைய அமைப்புகளை தடை செய்துள்ளனர்.
ராய்ட்டர்ஸ் செய்தியின்படி, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், ஜேர்மனியில் 8 மாநிலங்களில் உள்ள இதன் 53 வளாகங்கள் இன்று அதிகாலை சோதனை செய்யப்பட்டதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Post a Comment