Header Ads



5 வருடங்கள் கற்ற பாடசாலைக்காக 8 மில்லியன் செலவுசெய்த செல்லத்துரை முஹமட் றிப்னாஸ்


- பாறுக் ஷிஹான் -


கல்முனை  அஸ்-ஸுஹறா வித்தியாலயத்தின் பூரணப்படுத்தப்பட்ட இரண்டாம் மாடி கட்டிடம் உத்தியோகபூர்வமாக  ஞாயிற்றுக்கிழமை(14) மாலை  திறந்து வைக்கப்பட்டுள்ளது.


 பிரபல சமூக சேவகரும் இளம் தொழிலதிபரும் Essam Group of company முகாமைத்துவ பணிப்பாளருமான  செல்லத்துரை முஹமட் றிப்னாஸ் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு ரூபா 80 இலட்சத்திற்கும் அதிகமான தனது தனிப்பட்ட செலவில்    நான்கு வகுப்பறைகளை கொண்டமைந்த புதிதாக பூரணப்படுத்தப்பட்ட  கல்முனை  அஸ்-ஸுஹறா வித்தியாலயத்தின்   இரண்டாம் மாடி கட்டிடத்தை ஏனைய அதிதிகளுடன் இணைந்து  திறந்து வைத்தார்.


குறித்த நிகழ்வானது  கல்முனை  அஸ்-ஸுஹறா வித்தியாலய  அதிபர் எம். எச். எஸ். ஆர். மஜீதிய்யா(எல்.எல்.பி) தலைமையில் குறித்த நிகழ்வு நடைபெற்றது.


இதன் போது  1987 ஆண்டு பிறந்த நான் இப் பாடசாலையின் பழைய மாணவன்.1993 ஆண்டு தொடக்கம் 1997 ஆம் ஆண்டு வரை தரம் 1 தொடக்கம் 5 வரை கல்வி  கற்றேன்.என் வாழ்நாளில் இன்று மறக்க முடியாத நாள்.இது எனது முதல் மேடை.கன்னி பேச்சு.30வருடத்திற்கு பின்னர் இந்த இடத்தில் பேச வைத்த இறைவனுக்கு முதலில் நன்றி தெரிவிக்கின்றேன்.


இறைவன் எல்லோருக்கும் எல்லாவற்றையும் கொடுக்க மாட்டான்.கல்வி பொருளாதாரம் அறிவு இவ்வாறு இதில் ஒன்றை கொடுப்பான்.இறைவன் இவ்வாறு எமக்கு கொடுக்கின்ற கொடை சமூகத்திற்கு பயன்படாமல் இருந்தால் நாம் வாழ்வதில் எந்த அர்த்தமும் இல்லை.நாம் வாழ்ந்ததற்குரிய அடையாளம் எமது சமூகத்தில் கிடைக்கப் பெற வேண்டும்.அது அறிவாக கூட இருக்கலாம்.அது நீங்கள் பெற்ற பொருளாதாரமாக இருக்கலாம்.அது சமூகத்திற்கு சேரவில்லையாயின் நாம் வெறும் ஆட்கள்.நாம் இந்த சமூகத்தில் என்ன நன்மைகளை பெற்றோமோ அதை நான்கு பேர் பயன்பெற ஆவண செய்ய வேண்டும்.மிகப்பெரும் தர்மம் யாதெனில் நாம் பெற்றதை அல்லது நாம் கற்றதை மற்றுமொருவருக்கு சொல்லிக்கொடுப்பதாகும்.கற்பித்தல் ஆகப்பெரிய தர்மம் என இந்த சமூகத்திற்காக அனைவரும் ஒன்றினைந்து செயற்பட முன்வர வேண்டும் என பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய  36 வயது மதிக்கத்தக்க பிரபல சமூக சேவகரும் இளம் தொழிலதிபரும் Essam Group of company முகாமைத்துவ பணிப்பாளருமான  செல்லத்துரை முஹமட் றிப்னாஸ் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.