முதன்முதலாக பகிரங்கமாக அறிவித்தார் ரணில் - 4 முஸ்லிம் அரசியல்வாதிகளும் பங்கேற்பு
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக மேடையில் அறிவித்தார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
அனைவரையும் ஒன்றிணைந்து நாட்டை மீட்பதே முதன்மை நோக்கம்
சவாலை கண்டு ஒருபோதும் ஓடவில்லை : வாய்ப் பேச்சை விடுத்து கடமையை செய்தேன்.
நாட்டை மீட்பதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளேன்.
ஐ.எம்.எவ். உடன்பாடுகளுக்கு முரணாக செயற்பட முடியுமென கூறுவது நாட்டுக்கு ஆபத்தாகும்.
“ஒன்றாக வெல்வோம்” கூட்டத்தில் ஜனாதிபதி அறிவிப்பு
ஜனாதிபதி தேர்தலில் தாம் போட்டியிடவுள்ளதாக மேடையில் அறிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அதற்காக கட்டுப்பணம் கட்டியிருப்பதாகவும் தெரிவித்தார்.
காலி நகர சபை மைதானத்தில் இன்று (27) நடைபெற்ற 'ஒன்றாக வெல்வோம் - காலியில் நாம்' கூட்டத்தில் உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.
சவால்களில் இருந்து தாம் ஒருபோதும் பின்வாங்கவில்லை என தெரிவித்த ஜனாதிபதி, பேசிகொண்டிருக்காமல் தனது கடமைகளை நிறைவேற்றுவதே தனது அரசியல் கொள்கையெனவும், நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதாக மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவதாகவும் உறுதியளித்தார்.
பல அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 50 இற்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள்,காலி மாவட்டத்தைச் சேர்ந்த 15,000 இற்கும் அதிகமான மக்களும் அரசாங்கத்தின் எதிர்கால வேலைத்திட்டத்தை மக்களுக்கு அறிவிக்கும் இந்த மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
இவர்கள் ஜனாதிபதியின் வெற்றிக்காக தம்மை அர்ப்பணிப்பதாக உறுதிமொழிந்தனர்.
பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ, அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க, பந்துல குணவர்தன, டிரான் அலஸ், இராஜாங்க அமைச்சர்களான சட்டத்தரணி மொஹான் டி சில்வா, கீதா குமாரசிங்க, பியல் நிஷாந்த, டி. பி. ஹேரத், திலும் அமுனுகம, கனக ஹேரத், லொஹான் ரத்வத்த, அனுராத ஜயரத்ன, பிரமித பண்டார தென்னகோன், செஹான் சேமசிங்க, அனுப பஸ்குவல், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன,பாராளுமன்ற உறுப்பினர்களான ஜனக பண்டார தென்னகோன், வஜிர அபேவர்தன, சஹான் பிரதீப், கோகிலா குணவர்தன, மேஜர் பிரதீப் உந்துகொட, முதித சொய்சா, லலித் வர்ணகுமார, ராஜிகா விக்கிரமசிங்க, ஜகத் சமரவிக்ரம, குமாரசிறி ரத்நாயக்க, அகில எல்லாவல, மதுர விதானகே, ஜயந்த வீரசிங்க, ஏ. எல். எம். அதாவுல்லா, கலாநிதி கயாஷான் நாவந்த, குலசிங்கம் திலீபன், எஸ். சி முத்துக்குமாரன, முன்னாள் அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, பீ. ஹரிசன், விஜயகலா மகேஸ்வரன், முன்னாள் ஆளுநர் அசாத் சாலி, முன்னாள் மேயர் ரோசி சேனாநாயக்க உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள் பலரும் இந்த பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
Post a Comment