Header Ads



மொட்டு சிதைந்தது - Mp க்களை பிரித்தார் ரணில்


அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் நேற்று (24) கொழும்பில் இரண்டு இடங்களில் 48 பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆதரவு தொடர்பில் விசேட கலந்துரையாடலை நடத்தியதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதன்படி, அரசாங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 30 அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் கொழும்பு மல்பாறையில் சந்தித்து கலந்துரையாடியுள்ளதுடன், அரசாங்கத்தின் பின்வரிசை உறுப்பினர்கள் 18 பேர் தலவத்துகொடையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில்  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு மொட்டுச் சின்னத்தை வழங்கினால் ஏற்படும் நிலைமை குறித்து இரு தரப்பினரும் விரிவாக கலந்துரையாடியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் இந்த தருணத்தில் தற்போதைய ஜனாதிபதி தரணில் விக்கிரமசிங்கவிற்கு தமது ஆதரவை வழங்குவதற்கு இரு கட்சிகளின் இறுதி உடன்படிக்கை அனுப்பப்பட்டுள்ளது.


இதன்படி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஜனாதிபதி தேர்தல் பிரசாரம், அரசியல் அலுவலகம் அமைத்தல், வாக்களிப்பு நிலையத்தில் முகவர்களை நியமித்தல், ஊடகச் செயற்பாடுகளை முன்னெடுப்பது போன்ற விடயங்களில் இரு தரப்பினரும் அதிக கவனம் செலுத்தி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


அத்துடன், பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களின் ஆதரவை வழங்குவது தொடர்பில் விரிவான வேலைத்திட்டமொன்றை உருவாக்குவது தொடர்பிலும் நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.


இதுதவிர, அரசால் தொடங்கப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் உள்ளிட்ட அரசின் திட்டங்கள் குறித்து மக்களுக்குத் தெரிவிக்க, தொகுதி அளவில் முறையான பொறிமுறையை அமைப்பது குறித்தும் அறிக்கையில் கலந்துரையாடப்பட்டது.

1 comment:

  1. பதவிப் பித்தும், ஊழலில் மழுங்கிப் போன மகோடிஸ்களும் மிக முக்கியமான அடிப்படை விடயத்தை பொருட்படுத்துவதே இல்லை. அதாவது இந்த மகோடிஸ்கள் யாருக்கும் எதிர்வரும் தேர்தல்களில் வாக்களிப்பதில்லை. தற்போது பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மகோடிஸ்கள் கற்பனையில் அவருக்கும் இவருக்கும் ஆதரவு கொடுக்கும் கற்பனையில் இயங்கிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் யதார்த்தம் நிச்சியம் அதற்கு முரணாகவே அமையும். இரண்டு பிரதான கட்சிகளும் முதலில் செய்ய வேண்டியது தேர்தல் முடிவடைவது நெருங்கும் போது போதைப் பொருள் கடத்தும், ஊழல் நிரம்பிய, மதுபானக் கடைகளும் கஸினோக்களும் விபசார விடுதிகளும் நடாத்தும் மகோடிஸ்களும் உடனடியாக நாட்டை விட்டு விரண்டோடத் தொடங்கும் போது விமானநிலையம், துறைமுகங்களில் அந்த மகோடிஸ்களைத் தடுத்து நிறுத்தும் ஒரு செயல்முறையை ஏற்கனவே தயார்படுத்து வைக்க ​வேண்டும். யார் வெற்றி பெற்றாலும் அவர்கள் செய்ய வேண்டிய முதல் பணி பயங்கரவாத, மகோடிஸ்களை விரண்டோடாது தடுத்து நிறுத்தி உடனடியாக வழக்குத் தொடர்ந்து அவன்கள் அனைவரையும் சிறையில் அடைத்து பட்டினியில் சாவடிக்க வேண்டும். இந்தக் கைங்கரியத்தை வெற்றிகரமாக செயற்படுத்தும் கட்சிக்குத் தான் இந்ந நாட்டு பொதுமக்கள் தொடர்ந்தும் ஆதரவளிப்பார்கள் என்பதை அவர்கள் சரியாக மனதில் இருத்திக் கொள்ள வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.