Header Ads



காஸாவில் தியாகிகளின் எண்ணிக்கை 39,000 ஐ தாண்டியது


அக்டோபர் 7 முதல் காசா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 39,006 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 89,818 பேர் காயமடைந்துள்ளனர் என்று காஸா  சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.


கடந்த 24 மணி நேரத்தில் காசா முழுவதும் இஸ்ரேல் நடத்திய மூன்று வெவ்வேறு தாக்குதல்களில் 23 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும், 91 பேர் காயமடைந்ததாகவும் டெலிகிராமில் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இன்று காலை -22- முதல் தெற்கு காசாவில் கான் யூனிஸ் மீது இஸ்ரேலிய தாக்குதல்களில் 37 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 120 பேர் காயமடைந்துள்ளனர்.

No comments

Powered by Blogger.