Header Ads



எத்தியோப்பிய நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை 230 ஆக உயர்ந்தது



எத்தியோப்பியாவில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கிப் பலியானோர் எண்ணிக்கை 230 ஆக உயர்ந்துள்ளது.


கடந்த 21-ஆம் திகதி தெற்கு எத்தியோப்பியாவின் கெஞ்சோ சாச்சா கோஸ்டி மாவட்டத்தில் கோபா மண்டலத்தில் பெய்த கடும் மழையால் அங்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்டோர் உயிரிழந்துள்ளனர்.


திங்கள் கிழமையின் பிற்பகுதியில் 55 ஆக இருந்த பலி எண்ணிக்கை இன்று நிலவரப்படி 230ஆக உயர்ந்துள்ளது. அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கோபா மண்டல தகவல் தொடர்பு அலுவலகத்தின் தலைவர் கூறியுள்ளார்.


இந்த நிலச்சரிவினால் பலர் தங்கள் சொந்தங்களை இழந்துள்ளனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பிணங்களைக் கண்டு தேடிக் கதறும் காட்சிகளும் நிகழ்ந்து வருகின்றது.


எத்தியோப்பியாவின் மழைக் காலத்தின்போது நிலச்சரிவுகள் பொதுவானவை. இந்த நிலச்சரிவு ஜூலையில் தொடங்கி செப்டம்பர் நடுப்பகுதி வரை நீடிக்கும்.


இந்த நிலையில் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகள், நிவாரணக் குழுக்கள் ஈடுபட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அதிகாரிகள் அஞ்சம் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.