இலங்கையர்கள் 2 பேர் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி
மத்திய தூர ஓட்டப்பந்தய வீராங்கனை தருஷி கருணாரத்ன மற்றும் ஈட்டி எறிதல் வீராங்கனை தில்ஹானி லேகம்கே ஆகியோர் உலக தடகள தரவரிசையின் அடிப்படையில் 2024 இல் நடைபெறவுள்ள பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கான தகுதியைப் பெற்றுள்ளனர்.
இதற்கான தகுதிக் காலம் ஜூன் 30 ஆம் திகதியுடன் நிறைவடைந்த நிலையில், இப்போது அவர்களின் பங்கேற்பூ உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
ஆசிய சம்பியன்ஷிப் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இரண்டிலும் தங்கப் பதக்கம் வென்ற தருஷி கருணாரத்ன தரவரிசையில் 45ஆவது இடத்தைப் பிடித்து, 800 மீற்றர் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் 48 தடகள வீரர்களுக்குள் இடம் பிடித்துள்ளார்.
இதேவேளை, தற்போது 26ஆவது இடத்தில் உள்ள இலங்கை விளையாட்டு வீரர்களில் தில்ஹானி லேகம்கே அதியுயர் தரவரிசையை அடைந்துள்ளார்.இதற்கு 32 விளையாட்டு வீரர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
அருண தர்ஷன 51ஆவது இடத்தில் இருக்கிறார். அவருக்கு மேலே உள்ள மூன்று விளையாட்டு வீரர்களில் எவராவது ஒருவர் வெளியேறினால், அவர் முதல் 48 இடங்களுக்குள் நுழைவாரா என்பதை தீர்மானிக்க ஜூன் 04 ஆம் திகதி முடிவுக்காக காத்திருக்கிறார்.
Post a Comment