இஸ்ரேல் ஆதரவு பிரதமருக்கு படுதோல்வி - 14 ஆண்டுகளுக்குப் பிறகு தொழிலாளர் கட்சி ஆட்சி
பிரிட்டனில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு தொழிலாளர் கட்சி ஆட்சியைப் பிடிக்கிறது என சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
பிரிட்டன் தேர்தல் வரலாற்றில் மோசமான ஒரு தோல்வியை நோக்கி கன்சர்வேடிவ் கட்சி சென்று கொண்டிருக்கிறது.
இதன் மூலம் புதிய பிரதமராக கீர் ஸ்டார்மர் பதவியேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 2020-இல் தொழிலாளர் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் ஸ்டார்மர்.
தற்போது பிரதமராக இருக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சூனக் தனது பதவியை இழக்கிறார்.
மகிழ்ச்சி மிகுந்த தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய கீர் ஸ்டார்மர், "நாம் சாதித்துவிட்டோம்" என்று குறிப்பிட்டார்.
"மாற்றம் இப்போது தொடங்குகிறது" என்று கூறினார் ஸ்டார்மர்.
தோல்வியை ஒப்புக் கொண்டு அதற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்வதாக ரிஷி சூனக் தெரிவித்துள்ளார்.
Post a Comment