கட்டாருக்கு நன்றிகூற கடமைப்பட்டுள்ளோம் - அமைச்சர் ரமேஸ் பத்திரன
(அஷ்ரப் ஏ சமத்)
இலங்கையில் உள்ள கட்டார் சரட்டி நிறுவனம் இலங்கையின் சுகாதார அமைச்சுக்கும் இடையே 120 மில்லியன் ருபா பெருமதியான மருந்துப் பொருட்களை நன்கொடையாக வழங்கும் ஓப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. குறிப்பாக பின்வரும் நோய்களான Cardiovascular and Respiratory Diseases. கட்டார் நாட்டின் சுகாதார மேம்படுத்தல் திட்டத்திறகு உதவுகின்றது.
இந் நிகழ்வில் சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஸ் பத்திரன, அமைச்சின் செயலாளர் பி.ஜி. மகிபால, பணிப்பாளர் டொக்டர் அஸ்ல குணவர்த்தன, மற்றும் என்.ஜி.ஓ சஞ்சிவ விமலகுணவர்த்தன வும் கலந்து கொண்டார். .இந் நிகழ்வு சுகாதார அமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்றது
கட்டார் நாட்டின் இலங்கைக்கான பணிப்பாளர் மொஹூமூத் அபு கலிபா ஒப்பந்தித்தில் கைச்சாத்திட்டார். அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில் இலங்கையில மேற்படி நோய்களிலிருந்து குணமடைவதற்காக எமது கட்டார் சுகாதார திட்டம் மருந்துப் பொருட்களை வழங்குகின்றது. இந்த திட்டத்தினால் இந் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களது சுகத்திற்காக நாம் உதவுகின்றோம். குறிப்பாக இலங்கையில் 47 ஆயிரம் நோயாளிகள் மேற்படி நோய்யினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அவர்கள் எமது இச் சுகாதார திட்டத்தினால் நன்மையடைவார்கள்.என எதிர்பாக்கின்றோம்.
அமைச்சர் டொக்டர் ரமேஸ் பத்திரன அங்கு உரையாற்றுகையில் - கட்டார் நாட்டிற்கும் மக்களுக்கும் இலங்கையில் உள்ள கட்டார் துாதரகம் மற்றும சரட்டபிள் நிறுவனத்திற்கும் இலங்கை மக்கள் சார்பாக நாங்கள் நன்மை கூறக் கடமைப்பட்டுள்ளோம். அத்துடன் மேலும் சத்திரக் சிகிச்சைபடுக்கைகள் வெளிநோயாளர் படுக்கைகள் போன்ற தேவைகளையும் அவர் தெளிவுபடுத்தினார்
Post a Comment