12 பேர் SJB க்கு வரவுள்ளனர்
எதிர்வரும் இரண்டு வாரங்களில் 12 பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடன் இணையவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு வரவுள்ளதாக அரசாங்கம் ஒரு வருடமாக கூறி வருகின்ற போதிலும் எவரும் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவில்லை எனவும் தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலை ஜனாதிபதியால் ஒத்திவைக்கமுடியாது. ஆனால், பாராளுமன்றத்தில் ஒரு பிரேரணையை முன்வைத்து, மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் அந்தப் பிரேரணை நிறைவேற்றி, ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்கமுடியும்.
எனினும், கடந்த காலங்களில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமூலங்களின் போது, அரசாங்கத்துக்கு 112 வாக்குகளே கிடைத்தன. இது மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லை. தமிழ், முஸ்லிம் கட்சிகளுடன் இணைந்து பாரிய கூட்டணியை ஐக்கிய மக்கள் சக்தியே உருவாக்கும்.
ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து பலரும் அரசாங்கத்துடன் இணைந்துகொள்ள போகின்றனர் என கடந்த இரண்டு வருடங்களாக கூறிவருகின்றனர். எனினும், அவ்வாறு நடக்கவில்லை. எனினும், எதிர்வரும் இரண்டு வாரங்களில் 12 பேர் எம்முடன் இணைவர். ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து அரசாங்கத்துக்குச் சென்றவர்களே இவ்வாறு இணையவுள்ளனர் என்றார்.
Post a Comment