Header Ads



டுபாயிலிருந்து வந்த 10 இலட்சம் ரூபாய் - வலையில் வீழ்ந்த வர்த்தகரின் உயிரைக்குடித்த துப்பாக்கிகள்


தொழிலதிபர் ‘சுரேந்திர வசந்த பெரேரா’ அல்லது ‘கிளப் வசந்த’ உட்பட இருவரது கொலை மற்றும் நான்கு பேரைக் காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ‘பச்சை குத்துதல்’ நிலையத்தின் உரிமையாளர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரிக்கையில், டுபாய் இலிருந்து வந்த ஒப்பந்தம் ஒன்றின் பிரகாரம் ‘க்ளப் வசந்த’வை இந்த கடை திறப்புக்கு தான் அழைத்ததாக தெரிவித்துள்ளார்.


டுபாயில் இருந்து அவரது வங்கிக் கணக்கில் பத்து இலட்சம் ரூபா வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


“துபாயில் இருந்து வந்த ஒப்பந்தத்திற்காக கிளப் வசந்தவை கொல்ல உதவி செய்தேன்.. அந்த திட்டப்படி தான் வசந்தவை பச்சை குத்தும் கடை திறப்பு விழாவிற்கு அழைத்து வந்து கொல்ல திட்டம் போட்டேன். அதற்காக துபாயில் இருந்து 10 லட்சம் ரூபாய் பெற்றேன். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அத்துருகிரிய பச்சை குத்தும் நிலையத்தின் உரிமையாளர் பொலிஸாரின் விசாரணையின் போது வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


நேற்று (08) காலை 10.00 மணியளவில் அதுருகிரிய நகரின் மணிக்கூண்டு கோபுரத்திற்கு அருகில் அமைந்துள்ள பச்சை குத்தும் நிறுவன திறப்பு விழாவின் போது இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.


மூலம் : திவயின

No comments

Powered by Blogger.