UNP க்கு மகிந்தவின் எச்சரிக்கை
பிரதான தேர்தல்களைப் பிற்போடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி முற்பட்டால் அதுவே அக்கட்சிக்கு இறுதிப் பயணமாக அமைந்துவிடும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அரசமைப்பின் பிரகாரம் முதலில் ஜனாதிபதித் தேர்தலும், அதன்பின்னர் நாடாளுமன்றத் தேர்தலும் நடத்தப்பட வேண்டும்.
இரு தேர்தல்களையும் பிற்போட முடியாது. அவ்வாறானதொரு முட்டாள்தனமான முயற்சியில் ஐக்கிய தேசியக் கட்சி இறங்காது என்றே நம்புகின்றேன்.
அவ்வாறு இறங்கினால் அதுவே அக்கட்சியின் இறுதிப் பயணமாக அமையும். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி மீதே மக்களுக்கு நம்பிக்கை உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
மச்சானும் ஒன்றுவிட்ட மச்சானும் சேர்ந்து இரவு நேரத்தில் கோப்பி குடித்துவிட்டு திட்டம் போட்டுவிட்டு பகலில் பெரிய மச்சான் ஒன்றுவிட்ட மச்சானுக்கு எச்சரிக்கை செய்வதை யார் யாரை ஏமாற்றப்பார்க்கின்றார்கள் என்பது தான் பிரச்சினை. தற் போது பெரிய மச்சானின் பேச்சை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஒன்றுவிட்ட மச்சான் தனக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தை பாவித்து எனக்கு கெம் விட்டு விடுவாரோ என்ற அச்சம் உள்மனதில் இருக்கின்றது. இந்த அச்சம் தான் பகலில் அதனையும் இதனையும் உளருவதன் அர்த்தம். தேர்தலை மாத்திரம் வை. நாங்கள் யார் எனக்காட்டுகின்றோம் என பொதுமக்கள் துணிந்து விட்டார்கள்.இனி என்ன நடைபெறப் போகின்றது என்பதை ஒவ்வொன்றாக அவதானிப்போம்.
ReplyDelete