Header Ads



கடனாவில் தஞ்சமடைந்துள்ள முன்னாள் Mp


அனுராதபுரம் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் திட்டமிடப்பட்ட செயல் என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


கனேடிய குடியுரிமையைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.


உத்திக பிரேமரத்ன மற்றும் குறித்த பிரதேசத்தின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரும் இணைந்து இந்த தாக்குதலை திட்டமிட்டுள்ளதாகவும், அதற்குப் பயன்படுத்தப்பட்ட கைத்துப்பாக்கி உதவிப் பொலிஸ் அத்தியட்சகருக்கு பொலிஸ் திணைக்களம் வழங்கிய உத்தியோகபூர்வ கடமை துப்பாக்கி என்றும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


இந்த கைத்துப்பாக்கியை அரச ஆய்வாளருக்கு அனுப்பி அறிக்கை பெறுமாறு குற்றப் புலனாய்வுத் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இது தொடர்பிலான அறிக்கை கிடைத்தவுடன் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்படுவார்கள் என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.


எவ்வாறாயினும், உத்திக பிரேமரத்ன தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு தற்போது தனது குடும்பத்துடன் கனடாவிற்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.