Header Ads



காசாவுடன் ஒப்பிடும்போது எனது, வாழ்வாதார இழப்பு ஒன்றும் பெரியதல்ல - உதைப்பந்தாட்ட நட்சத்திரம் அறிவிப்பு


காசா மீதான இஸ்ரேலின் போர் குறித்த சமூக ஊடகப் பதிவுகள் தொடர்பாக ஜெர்மன் கால்பந்து கழகத்தில் இருந்து நீக்கப்பட்ட நெதர்லாந்து கால்பந்து வீரர் அன்வர் எல் காசி தொடர்ந்தும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார்.


இஸ்ரேல்-காசா போருக்கு மத்தியில் பாலஸ்தீன மக்களுக்கு தனது ஆதரவை வெளிப்படுத்தியதை அடுத்து, 28 வயதான எல் காசி, ஜேர்மன் பன்டெஸ்லிகா கழகத்தில் இருந்து கடந்த ஆண்டு நவம்பரில் நீக்கப்பட்டார்.


இன்ஸ்டாகிராமில் "ரிவர் டு தி சீ" என்ற புவியியல் ரீதியாக ஜோர்தான் நதிக்கும் மத்தியதரைக் கடலுக்கும் இடையிலான பகுதியைக் குறிக்கும் ஒரு அரசியல் சொற்றொடரைப் பயன்படுத்தியதற்க்காக இந்த தடை மேற்கொள்ளப்பட்டது.


காசாவில் அப்பாவிகள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் தாக்குதலுடன் ஒப்பிடும்போது எனது வாழ்வாதார இழப்பு ஒன்றும் பெரிய இழப்பு இல்லை என்று அவர் பதில் வழங்கியிருந்தார்.


இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தல பதிவில், தான் தொடர்ந்தும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவளிப்பதாக பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.