எலான் மஸ்க் இலங்கை வருவதால், நாடு மேலும் முன்னேறும் - டெஸ்லாவின் கிளையும் ஆரம்பம்
குறித்த விடயத்தை அவர் தொழில் மற்றும் வெளிநாட்டு அமைச்சினால் நாடளாவிய ரீதியில் நடத்தப்படுகின்ற ஜயகமு ஸ்ரீ லங்கா மக்கள் நடமாடும் சேவை தேசிய வேலை திட்டத்தின் இரண்டாம் நாள் நிகழ்வு பதுளை கால்பந்து விளையாட்டு மைதானத்தில் நேற்று(01.06.2024) இடம்பெற்ற போது கூறியுள்ளார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் , டெஸ்லா கார், ஸ்பேஸ் எக்ஸ், இ-பே, பிட் கொயின், ஸ்டாலின்ங் செட்லைட் போன்ற நிறுவனங்கள் உலகின் முதன்மை தொழில் அதிபரான எலான் மஸ்க் அவர்களினதாகும்.
அவர் இலங்கையில் டெஸ்லாவின் கிளையொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.
எலான் மஸ்க் ஒரு சக்திவாய்ந்த தொழில் முயற்சியாளர். தொழில்நுட்பத்தை உலகுக்குக் அறிமுகம் செய்தது மாத்திரமின்றி அவரின் ஊடாக நாம் நிறைய கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. அவர் பல்கலைக்கழக கல்வியைப் பெறாவிட்டாலும் அவரின் செயற்பாடுகள் உலக மக்களின் கவனத்தை ஈர்த்தது எனலாம்.
இவர் கொலையாளி என்று சுனில் ஹந்துன்நெத்தி அழைப்பதை நான் சமூக ஊடகத்தில் பார்த்தேன். அவர் கூறுவது போன்று எலான் மஸ்க் பொருளாதாரக் கொலையாளி அல்ல. மாறாக அவர் உலகப் பொருளாதாரத்தையே மாற்றியமைத்த சிறந்த தொழில் முயற்சியாளர்.
உலக பொருளாதார முன்னேற்றத்துக்கு கைகொடுத்தவர். இவரைப் போன்ற ஒருவர் இலங்கைக்கு வரும்போது நாட்டின் தொழில்நுட்பம் உலகத்துடன் இணைக்கப்படும்.
ஸ்டாலின் சேட்டிலைட்டுடன் இணைக்கப்பட்டால் நாம் எங்கிருந்தும் வேலை செய்யலாம். உலகெங்கிலும் உள்ளவர்கள் இலங்கைக்கு வந்து வேலை செய்யலாம். எனவே இதில் நாம் மகிழ்ச்சியடைய வேண்டும்.
நாட்டின் பண்முகத்தன்மை மற்றும் நல்லிணக்கத்தில் இருந்து புதிய நாட்டை உருவாக்க கைகோர்க்க வேண்டும். நாம் இஸ்ரேலில் விவசாயத்துறை, நிர்மாணத்துறை, சுற்றுலாத்துறை, மற்றும் பொது வேலைத் துறையில் வேலை வாய்ப்புகளை இளைஞர்களுக்கு பெற்றுக் கொடுத்துள்ளோம்.
இளைஞர்களாகிய நீங்கள் உங்களது இலக்கு, நோக்கம் என்ன என்பதை புரிந்து செயல்பட்டால் இந்த நாட்டில் அனைத்து கிராமத்தவர்களிடமும் பணம் செழிக்கும். இளைய தொழில் முனைவோர் உருவாகுவார்கள். சில அரசியல் கட்சிகளுக்கு நாம் இவ்வாறு முன்னேற்றம் அடைவது விருப்பம் இல்லை.
மாறாக நாம் தொடர்ந்தும் வறுமையிலும் அயல் நாடுகளின் உதவிகளைப் பெற்று வாழவே விரும்புகிறார்கள். நமது இளைஞர்கள் வெளிநாடு சென்று தொழில்முனைவோராக இருந்தால், இக்கட்சிக் காரர்களுக்கு அரசியல் செய்ய முடியாது . என்பதால் பல பொய் குற்றச்சாட்டுகளை இவர்கள் முன்வைக்கின்றார்கள் என தெரிவித்துள்ளார்.
Post a Comment