Header Ads



மீண்டும் ஆட்சியமைக்கப்போகும் பாஜக


2024 லோக்சபா தேர்தலில் பாஜகதான் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று பெரும்பாலான லோக்சபா தேர்தல் எக்சிட் போல் கணிப்புகள் தெரிவித்து உள்ளன.


நாடு முழுக்க 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. ஏப்ரல் 19, ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் நடைபெற்ற முதல் மூன்று கட்டத் தேர்தலில் முறையே 66.1, 66.7 மற்றும் 61 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 2019 தேர்தலை விட இதுவரை வாக்குப்பதிவு குறைந்துள்ளது. அதன்பின் 4ம் கட்ட தேர்தல் 9 மாநிலங்கள், 1 யூனியன் பிரதேசத்தில் நடந்தது. ஆந்திரப் பிரதேசத்தில் 25 தொகுதிகளில் தேர்தல் நடந்தது. இதில் 67.25 சதவிகித வாக்குகள் பதிவானது.


தொடர்ந்து 6 மாநிலங்களில் 5ம் கட்ட தேர்தல் நடந்தது. இதில் 60.48% வாக்குகள் பதிவாகி உள்ளது. அதன்பின்பான ஆறாவது கட்டத் தேர்தலில் எட்டு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் (UTs) மொத்தம் 889 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதையடுத்து இன்று கடைசி கட்ட தேர்தல் நடந்தது. 


இந்த நிலையில்தான் 2024 லோக்சபா தேர்தலில் பாஜகதான் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று பெரும்பாலான லோக்சபா தேர்தல் எக்சிட் போல் கணிப்புகள் தெரிவித்து உள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.