Header Ads



மெளனமாக அரங்கேறும் பெற்றோர், அவமதிப்பை அஞ்சிக் கொள்ளுவோம்


- Imran Farook -


🔺️🔺️🔺️️🔺️🔺️🔺️🔺️🔺️🔺️🔺️🔺️🔺️🔺️🔺️🔺️🔺️


⛔ நாற்பது, ஐம்பது, அறுபது வயதைத் தாண்டிய ஒரு தாய், திடகாத்திரமான தன் இருபது வயது பெண் மகளுக்குகாக சேவை செய்யவும் அவளது குழந்தைகளை (பேரப்பிள்ளைகளை) பராமரிக்கவும் கட்டாயப்படுத்துவது ஒரு வகை மொளன (பெற்றோர்) அவமதிப்பாகும். 

⛔ நாற்பது, ஐம்பது, அறுபது வயதைத் தாண்டிய ஒரு தந்தை, தனக்குள்ள மூட்டுவலி, முதுகுவலியோடு, தனது இருபது, முப்பது வயதுள்ள தெம்புள்ள ஆண் மகனுக்காக பணி செய்ய நிர்ப்பந்திப்பது ஒரு வகை மெளன (பெற்றோர்) அவமதிப்பாகும்.

வாலிப வயதில் உள்ள தனயன் சந்தை சென்று வாங்கி வந்து கொடுக்க வேண்டிய வீட்டுப் பொருட்களை வயதான தந்தை சென்று வாங்கி வரும் படி பணிப்பது ஒரு வகை மெளன( பெற்றோர்) அவமதிப்பாகும். 

⛔ நாம் நினைப்பது போன்று பெற்றோர்களை அவமதிப்பதென்பது அவர்களை வாய் கிழிய ஏசுவதும் திட்டுவதும் அவர்களை பாராது, அனாதரவாக விடுவது மாத்திரமல்ல. 

⛔ சில சமயம் பகிரங்கமான அவமதிப்பை விட அதிகம் வலிக்க வைக்கும் அந்தரங்கமான அவமதிப்பு வடிவங்களும் உள்ளன, என்பதை உணரத் தவராதீர்கள். 

✅ நம் தாய்மார்களை மதித்து மரியாதை செய்யும் வடிவங்களில் ஒன்தான் அவர்களின் இயல்புணர்வையும் இரக்க குணத்தையும் பயன்படுத்தி நமக்கு தொண்டு செய்யும் நமது குழந்தைகளை பராமரிக்கவும் இடம் வைக்காமல் இருப்பதாகும். 

✅ நம் தாய்மார்களை மதித்து மரியாதை செய்யும் வடிவங்களில் இன்னொன்ருதான் நமக்கிருக்கும் சின்ன பெரிய கஷ்டங்கள் தொல்லைகளை எல்லம் அவர்களிடம் சொல்லி அவர்கள் மனதையும் வலிக்க வைக்காமல் இருப்பாதாகும். 

✅ நம் சிறுபிராயத்தில், நமக்காக அவர்களின் சுகங்களை துறந்து நம்மை சுகமாக வைத்ததுப் பார்த்தது போல நாமும் அவர்களுக்கு சுகவாழ்வை அளிப்பதாகும். 

✅ எமது அடங்காத மழலைப் பருவத்திலும் அட்டகாசமான குழந்தைப் பருவத்திலும் அவர்கள் முன்னாலும் பின்னாலும் ஓடி வந்து நம்மை கவனித்து போல அவர்களின் தள்ளாடும் இந்த வயதில் நாம் அவர்களை கவனித்துப் பார்ப்பதாகும். 

✅ அறுபது வயது தாய் ஒருவள் நமக்காக தொண்டு செய்யும் தெம்பில் இருக்கவே மாட்டாள். மாறாக நாம் தான் அவளுக்கு தொண்டு செய்யும் தெம்பில் இருக்கிறோம் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். 

✅ அறுபது வயது தந்தை ஒருவர்,  விதைகளை நடவு செய்து தண்ணீர் ஊற்றி பராமரிக்கும் நிலையில் உள்ளவரல்ல, கனிகளை அறுவடை செய்து பலன்களை காண வேண்டிய நிலையில் உள்ளவர். 

வான் மறை வசனம் ஒன்று அவர்களுடன் பின்வருமாறு நடக்கும் படி போதிக்கிறது:

((தயவோடு பணிவு என்னும் சிறகை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீராக;

'நான் சிறுவனாக இருக்கும் போது என்னை இருவரும் (பரிவோடு) பராமரித்தது போல் இறைவா! அவ்விருவருக்கும் அருள் புரிவாயாக! என்று பிரார்த்திப்பீராக"))

📖 அல்குர்ஆன் : 17:24

✍ தமிழாக்கம்  / imran farook

No comments

Powered by Blogger.