மக்களை கொடிய பாலத்திற்கு கொண்டுசெல்ல முயலும்போது நாம் அமைதியாக இருக்க முடியாது
கூட்டணி கட்சிகள் மற்றும் அமைப்புகளின் பிரதானிகளின் தலைமையில் இந்த கூட்டம் இடம்பெற்றது.
இன்று மதியம் 2 மணிக்கு "69 இலட்சம் மக்களின் எதிர்ப்பார்ப்பை மீண்டும் உயிர்ப்பிப்போம்" என்ற தொனிப்பொருளில் பேரணி ஆரம்பமாகியது.
இதில் கலந்து கொள்வதற்காக சர்வஜன அதிகாரம் கூட்டணியை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் 5 இடங்களில் இருந்து நுகேகொடைக்கு பேரணியாக சென்றிருந்தனர்.
பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தலைமையிலான பிவிதுரு ஹெல உறுமய நுகேகொடை ஈரநில பூங்காவில் இருந்தும், பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவின் தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர்கள் கட்டிய சந்தியில் இருந்தும், பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தலைமையிலான ஜனநாயக இடதுசாரி முன்னணி பாகொட வீதியில் இருந்தும், மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதிகள் கொஹுவளை சந்தியில் இருந்தும் பேரணியில் இணைந்து கொண்டனர்.
தொழிலதிபர் திலித் ஜயவீர தலைமையிலான மவ்பிம ஜனதா கட்சியினர் ஸ்டான்லி திலகரட்ன மாவத்தையிலிருந்து பேரணியாக சென்று பொது கூட்டத்தில் இணைந்து கொண்டனர்.
கூட்டத்தில் உரையாற்றிய தொழிலதிபர் திலித் ஜயவீர,
“ரணில் விக்கிரமசிங்க மக்களை கொடிய பாலத்திற்கு கொண்டு செல்ல முயலும் போது நாம் அமைதியாக இருக்க முடியாது. இந்த நாடு இப்படி வீழ்வதை அனுமதிக்க முடியாது.
நாம் மட்டும்தான் மாற்று அரசியலை முன்வைத்துள்ளோம். இது பாரம்பரிய அரசியல் சந்திப்பு அல்ல. இந்த நாடு தொழில் முனைவோர் நாடாக மாற வேண்டும். வேறு வழியில்லை."
Post a Comment