சுதந்திரக் கட்சி தலைவராக நிமால், செயலாளராக துமிந்த
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக துறைமுகங்கள் துறை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவும், பொதுச்செயலாளராக நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்கவும் ஏகனமதாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற கட்சியினது, ஒரு பிரிவினரின் நிறைவேற்றுகுழுவால் இவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் கடந்த ஏப்ரல் மாதம் 08ஆம் திகதி இலங்கை மன்றக்கல்லூரியில் இடம்பெற்ற, கட்சியின் அரசியல்பீடக் கூட்டத்தின்போது நிமால் சிறிபால டி சில்வா, பதில் தலைவராகவும், துமிந்த திசாநாயக்க பதில் செயலாளராகவும் நியமிக்கப்பட்டிருந்தனர்.
இதேவேளை, கட்சியின் மற்றுமொரு பிரிவு, நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவை கட்சியின் பதில் தலைவராக கடந்த ஏப்ரல் 21ஆம் திகதியன்று தெரிவுசெய்தது.
இந்த தெரிவு, முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இடம்பெற்றது.
எனினும் விஜயதாச ராஜபக்ச, கட்சியின் பதில் தவைராக செயற்படுவதற்கு நீதிமன்றம் இடைக்காலத்தடையை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Post a Comment