அபாபீல் உதவும் கரங்கள் காரியாலய திறப்பு விழாவும், ஆசிரியர் - மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கும் நிகழ்வும்
அபாபீல் உதவும் கரங்கள் அமைப்பின், தலைவர் M.A.C.M. அமீன் தலைமையில், இந்த நிகழ்வு இடம்பெற்றது.
நிகழ்வில் பிரதம அதீதியாக அஷ்சேஹ் அப்துல் நாசர் மௌலவி 'எமது கல்வி நிலையும் எதிர்கால சவால்களும்' என்ற தலைப்பில் உரையாற்றினார்.
இதன்போது முன்பள்ளி ஆசிரியர்களின், சேவைப் பணியை பாராட்டி பரிசில்களும் வழங்கப்பட்டதுடன், மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டன.
அத்துடன் சற்கர நாட்காலி கதிரையும் வழங்கப்பட்டது.
அபாபீல் உதவும் கரங்கள் அமைப்பின் செயலாளர் ஆசிரியர் அமீரலி, அபாபீல் முஸ்லீம் கலாச்சார மற்றும் மகளிர் விவகார பொறுப்பாளர், அப்துல் மலீக் மௌலவி ஆகியோரின் உரைகளும் இடம்பெற்றது.
மேலும் மாணவர்களின் கசீதா மற்றும் பாடல் நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டன. இந்நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை அபாபீல் உதவும் கரங்கள் அமைப்பின் உறுப்பினர்கள் இணைந்து மேற்கொண்டிருந்தனர்.
அபாபீல் உதவும் கரங்கள் அமைப்பானது யாழ்ப்பாணம், புத்தளம், நீர்கொழும்பு, பாணந்துறை உள்ளிட்ட பகுதிகளில் தமது சேவைகளை ஆற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment