Header Ads



லிட்ரோ இன்று, விலை குறைகிறது (முழு விபரம்)


இன்று (04) நள்ளிரவு முதல் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக லிட்ரோ எரிவாறு நிறுவனம் தெரிவித்துள்ளது.


இதன்படி, 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர்  150 ரூபாவினால் குறைக்கப்படவுள்ள நிலையில், அதன் புதிய விலை 3,790 ரூபாவாகும்.


5 கிலோ கிராம் எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 60 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 1,525 ரூபாவாகும்.


2.3 கிலோ கிராம் எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 28 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 712 ரூபாவாகும்.

No comments

Powered by Blogger.