Header Ads



ஒரேநாளில் அதிபர், ஆசிரியர்களுக்கு சுகயீனம் - பாடசாலைகள் ஸ்தம்பிதம், மாணவர்கள் அவதி


தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் நாடளாவிய ரீதியில் சுகயீன விடுமுறை போராட்டத்தில் புதன்கிழமை (26) ஈடுபட்டு வருகின்றனர்.


இதனால், பாடசாலைகளிலும் மாணவர்களின் வருகை குறைவாக காணப்படுகிறது.  மாணவர்கள் பாடசாலைக்கு வந்து திரும்பி செல்வதையும் அவதானிக்க கூடியதாக இருந்தது.


பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் இன்று (26) சுகயீன விடுமுறையை அறிவித்து நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.


அத்துடன், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களை கொழும்புக்கு அழைத்து வந்து ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


இதேவேளை, வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக பல பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களை இன்றைய தினம் பாடசாலைகளுக்குச் செல்ல வேண்டாம் என குறிப்பிட்ட ஆசிரியர்கள் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இரண்டாம் பாடசாலை தவணை ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்த தொழிற்சங்கத்தினால் நாடு முழுவதிலும் உள்ள பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.