Header Ads



அலரி மாளிகையை நோட்டமிட்ட ட்ரோன் - விசாரணையில் வெளிவந்த உண்மை


கொழும்பு கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள அலரி மாளிகை வளாகத்துக்குள் ட்ரோன் கண்காணிப்பு கமராவை செலுத்திய குற்றச்சாட்டில் இரண்டு இந்தியர்கள் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அவர்கள் செலுத்தியது ஒரு பறக்கும் பந்து வகை விளையாட்டுப் பொருள் என தற்போது தெரியவந்துள்ளது. 


கொழும்பு கொள்ளுபிட்டியில் அமைந்துள்ள அலரி மாளிகை வளாகத்துக்குள் ட்ரோன் போன்ற பொருளொன்றை செலுத்திய குற்றச்சாட்டில் இரு இந்தியர்கள் கடந்த திங்கட்கிழமை (24.06.2024) கைது செய்யப்பட்டிருந்தனர்.


இதனையடுத்து, அவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பறக்கும் பந்து வகை விளையாட்டுப் பொருள் ஒன்றே அலரி மாளிகை வளாகத்துக்குள் பறக்க விடப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.


எவ்வாறாயினும், விசாரணைகள் இன்னும் நிறைவு பெறாததால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.


அத்துடன், சமூக வலைத்தளங்களில் இந்த சம்பவம் ஒரு பாதுகாப்பு அச்சுறுத்தலாக தவறாக கருதப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


மேலும், குறித்த சம்பவம் எந்த விதமான அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது எனவும் இதனை ஒரு அச்சுறுத்தலாக கருதி வெளிவரும் ஊடக அறிக்கைகள் தவறானவை எனவும் பொலிஸார் விளக்கமளித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.