Header Ads



ரணில் பக்கம் சாய்வதற்காக, மார்ஷல் பதவியா..?


ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு உலகின் பாதுகாப்புத் துறையில் மிக உயர்ந்த மார்ஷல் பதவி விரைவில் வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


அரசாங்கத்திடம்  பொன்சேகா விடுத்த கோரிக்கைக்கு அமைய ஆறு நட்சத்திர ஜெனரலாக கருதப்படும்  "மார்ஷல்" பதவி அவருக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


வடக்கின் யுத்த வெற்றிக்காக  பொன்சேகா ஆற்றிய தியாகத்தை கருத்தில் கொண்டு இதற்கு முன்னர் பீல்ட் மார்ஷல் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.


அவருக்கு இம்முறை வழங்கப்பட உத்தேசிக்கப்பட்ட மார்ஷல் பதவி இதற்கு முன்னர் உலகின் பிரபல அரசியல் தலைவர்கள் மற்றும் இராணுவத் தலைவர்கள் பலருக்கு வழங்கப்பட்டிருந்தது.


யூகோஸ்லாவியாவின் முன்னாள் ஜனாதிபதி மார்ஷல் டிட்டோ, அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டன், ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதி ஜோசப் ஸ்டாலின், சீனாவின் முன்னாள் ஜனாதிபதி மாவோ சேதுங், வடகொரியாவின் முன்னாள் ஜனாதிபதி கிம் இல் சுங், ஜெர்மனியின் முன்னாள் போர்த் தலைவர் ஹெர்மன் கோரிங் மற்றும் பிற உயர்மட்ட ரஷ்யாவின் தலைவர்கள் இதற்கு முன் மார்ஷல் பட்டத்துடன் கௌரவிக்கப்பட்டனர்.

No comments

Powered by Blogger.