உலக சாதனைக்கான ஒரு முயற்சி
செல்வன் பஹ்மி ஹஸன் சலாமா
‘பாக்கு நீரிணையூடாக உயிர் காப்பு மற்றும் பிளாஸ்டிக் அற்ற சூழலொன்றை உருவாக்கல் என்பவற்றைக் காண இலங்கையரான ஓர் இளம் வயதினரின் பயணம்
அறிமுகம்
அ. சாதனை படைக்கும் நீச்சல் தொடர்பான சுருக்கமான பகுப்பாய்வு
பாக்கு நீரிணையூடாக நீந்துவதென்பது வெறுமனே பொறுமை தாங்கும் ஆற்றலுடன் கூடிய ஒரு வீரச்செயல் மாத்திரமன்றி, அது மனித உறுதிப்பாடு மற்றும் எதிர்ப்பாற்றல் என்பவற்றிற்கான ஓர் உடன்படிக்கையுமாகும். இம்முயற்சி இந்தியாவின் தனுஷ்கோடியிலிருந்து இலங்கையின் தலைமன்னாருக்கான 32 கிலோமீட்டர் தூரத்துடன் கூடிய நீரிணையை நீந்திக் கடப்பதுள்ளிட்ட ஒரு வரலாற்று நிகழ்வெனலாம். பாக்கு நீரிணையில் தற்போது நிலவுகின்ற ஊகிக்க முடியாத சூழமைவுகள் மிக அனுபவம் வாய்ந்த நீச்சல் வீரர்களுக்குக் கூட சவாலாக அமைந்துள்ளன. இலங்கையரான இள வயதையுடைய செல்வன் பஹ்மி ஹஸன் சலாமா விளையாட்டு வரலாற்றிலே தனது பெயரை பதிந்து கொள்வதற்காக தனது இலக்கினை அடைந்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
ஆ. நீச்சல் வீரர் மற்றும் அவரது சாதனைகள் தொடர்பான அறிமுகம்
2009 பெப்ருவரி மாதம் 15 ஆம் தேதி பிறந்த செல்வன் பஹ்மி ஹஸன் சலாமா திண்ணமான உறுதி மற்றும் இலக்குகளை தன்னகத்தே கொண்ட ஒருவராவார். 15 வயது என்ற சிறுவயதிலேயே அவர் விளையாட்டில் சாதனைகள் பலவற்றிற்கு உரித்தான ஒருவராவார். தற்போது இலங்கை திருக்கோணமலை சாஹிரா வித்தியாலயத்தில் 9 ஆம் வகுப்பில் கல்வி கற்கின்ற அவர், நீச்சல் விளையாட்டில் ஒளிரும் நட்சத்திரமொன்றாக வருகின்ற ஆவலுடனுள்ள ஒரு வீரராவார். அவரது அர்ப்பணிப்புக்கள், ஆற்றல்கள் தொடர்பாக தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்ற பாராட்டுரைகள் இது பற்றி கட்டியம் கூறுகின்றன. . செல்வன் பஹ்மி ஹஸன் சலாமாவின் இப்பயணம் வெறுமனே சாதனைகளை முறியடிக்கின்ற ஒரு பயணம் மாத்திரமன்றி, ஒரு பரம்பரையின் எழுச்சியூட்ட வல்ல ஒரு பயணமென்பதோடு, தடைகளைத் தாண்டி சாதனை படைப்பதற்கு வயது ஒரு தடையல்ல என்பதை மெய்ப்பிக்கின்ற ஒரு நிகழ்வுமாகும்.
II. பின்னணி தொடர்பான தகவல்கள்
அ. பாக்கு நீரிணை மற்றும் அதன் சவால்கள் தொடர்பான விபரங்களும்.
பாக்கு நீரிணை என்பது இந்தியாவின் தென்கிழக்குத் தீரத்திற்கும் இலங்கையின் வடமேல் கடற்கரைக்கும் இடையில் அமையப்பெற்றுள்ள வலிமையான சவால்களுடன் கூடியதும் முக்கியத்துவம் வாய்ந்ததுமான ஒரு நீரிணையாகும். கிலோமீட்டர் 53 லிருந்து 85 வரையிலான அகலத்துடன் கூடிய இச்சிறு நீரிணை மன்னார் குடாவையும் வங்காள விரிகுடாவையும் ஒன்றிணைக்கின்ற முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கடல் வழியாகும்.
இது எவ்வாறாயினும் அந்நீரிணையின் அமைதியான மேற்பரப்பின் கீழ் நிலவுகின்ற சிக்கலான நிகழ்வுகள் காரணமாக, அந்நீரிணையை நீந்திக் கடப்பதற்கு முன்வருகின்ற அச்சமற்ற அனுபவம் வாய்ந்த நீச்சல் வீரர்களுக்குக் கூட கணிசமான தடங்கல்களை ஏற்படுத்துகின்றன.
எதிர்பாராத நீரோட்டங்கள், வலுவான உவாப்பெருக்கு மற்றும் பல்வேறு காலநிலை மாற்றங்கள் என்பன பாக்குநீரிணைக்கே உரித்தான அடிப்படையான சவால்களாகும். பாக்கு நீரிணையின் மூலோபாய அமைவிடம் சூறாவளிகள் மற்றும் பருவக்காற்றுக்களின் தாக்கம் காரணமாக கொந்தளிப்புடன் கூடிய மற்றும் கணிசமானளவு ஏற்ற இறக்கங்களுடன் கூடிய கடல் இயல்பினை தோற்றுவிக்க வல்ல ஒன்றாகும். இதற்கு மேலதிகமாக சுறா மீன்கள் மற்றும் ஜெலி மீன்கள் போன்ற கடல்வாழ் உயிரினங்களும் நீச்சல் பணிகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு சவாலாக உள்ளன. இத்தகைய அபாயகரமான நிலைமைகளின் கீழ் உடற்பலம் மற்றும் வீரச் செயல் மாத்திரமன்றி உளரீதியான ஊக்குவிப்பு மற்றும் மூலோபாய திட்டமிடல் என்பனவும் இன்றியமையாதவையெனலாம்.
ஆ. நீச்சல் வீரரின் பயிற்சிகளும் முன்னேற்பாடுகளும் தொடர்பான அடிப்படைத் தகவல்கள்
செல்வன் பஹ்மி ஹஸன் சலாமாவின் பாக்கு நீரிணையை நீந்திக் கடக்கும் இப்பயணம் எல்லையற்ற பயிற்சிகள், பாதுகாப்புடன் கூடிய முன்னேற்பாடுகள், அசைக்க முடியாத உறுதிப்பாடு என்பவற்றை உள்ளடக்கிய ஒன்றாகும். இச்சவால்களின் அபாயகரத் தன்மையை இனம் கண்டு கொண்ட செலவன் பஹ்மி ஹஸன் சலாமா தனது நீச்சலாற்றலை மெருகூட்டுவதற்காகவும் சகிப்புத்தன்மையை வளர்த்துக் கொள்வதற்காகவும் பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து ஆசியாக் கண்ட சாதனையை நிகழ்த்தியிருக்கின்ற புகழ்பெற்ற நீச்சல் ஆலோசகராகிய கோப்ரல் ரோஹண அபேசுந்தர என்ற பயிற்சியாளரின் விசேட நிபுணத்துவப் பயிற்சியில் எண்ணற்ற மணித்தியாலங்கள் அர்ப்பணிப்போடு ஈடுபாடு காட்டியுள்ளார். பயிற்சிப் பணிகள் நீண்ட தூர நீச்சல், திறந்த நீர் ஊடறுப்பு மற்றும் வலுவான பயிற்சிகளுடன் கூடிய பல்வேறு நுட்ப முறைமைகளை உள்ளடக்கிய ஒன்றாகும். மேலும் அவர் பாக்கு நீரிணையில் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் எதிர்கொள்ள வேண்டி வருகின்ற பல்வேறு சவால்களை வெற்றி கொண்டு தனது இலக்கை அடைவதற்குத் தேவையான கருவிகள் மற்றும் உபகரணங்களுடன் கூடியதாக கடலில் முக்குளித்தல், உயிர்ப் பாதுகாப்பு நுட்பங்கள் போன்ற கடல் நீர் சார்ந்த பாதுகாப்புப் பணிகள் தொடர்பான நிபுணத்துவ பயிற்சிகளையும் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்.
உடற் பயிற்சிகளுக்கு மேலதிகமாக வழங்கல்கள் மற்றும் திட்டமிடல்களுக்கு அமைய, முழுமையான முன்னேற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளார். அத்தகைய பயிற்சிகளில் பயண வழியிலுள்ள சிக்கலான நிலைமைகளுக்கு அமைய, தன்னை சுதாகரித்துக் கொள்ளுதல், அலைகளின் போக்குகள், காலநிலை எதிர்வு கூறல்கள் மற்றும் அனுபவத்துடன் கூடிய உயிர் காப்பாளர்கள், நடுவர்கள், வழங்கல்களின் இணைப்பாளர்கள் போன்ற அர்ப்பணிப்போடு பணியாற்றுகின்ற உதவிக் குழுக்களோடு இணைந்து பணியாற்றல் போன்ற பல்வேறு துறைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. திட்டமிடப்பட்ட முன்னேற்பாடுகள் மற்றும் அர்ப்பணிப்புகளூடாக செல்வன் பஹ்மி ஹஸன் சலாமா தனது மறக்க முடியாத இப்பயணத்தினை நம்பத்தகு தன்மையுடனும் உறுதியான நிலைப்பாட்டுடனும் கூடிய வகையில் நிறைவு செய்யும் நிலைப்பாட்டுடன் உள்ளார்.
இ. நீச்சல் வீரரின் வெற்றிகளும் பாராட்டுக்களும்
நீச்சல் வீரர் ஒருவரென்ற வகையில் செல்வன் பஹ்மி ஹஸன் சலாமா கடந்த காலங்களில் கணிசமானளவு வெற்றிகளையும் பாராட்டுரைகளையும் அவரது ஆற்றல்கள், அர்ப்பணிப்புகள் மற்றும் உயர் திறன் என்பவற்றை மெச்சும் வகையிலே பெற்றுக் கொண்டுள்ளார்.
இந்த இளம் வயதிலேயே அவர் இலங்கை விளையாட்டுத் துறையில் துடைத்தழிக்க முடியாதவாறு தனது பெயரைப பதிவு செய்து கொண்டுள்ளதோடு, நீச்சல் தடாகத்திலும் பல அங்கீகாரங்களுக்கும் ஆளாகியிருக்கிறார் கீழே காட்டப்பட்டிருப்பது செல்வன் பஹ்மி ஹஸன் சலாமாவின் சில முக்கியமான வெற்றிகளாகும்.
திருக்கோணமலை YANA நீச்சல் பாடசாலையில் 2022 மே மாதம் 10 ஆம் திகதி வெண்கல மட்ட நீச்சல் பயிற்சியைப் பூர்த்தி செய்தமை.
திருக்கோணமலை YANA நீச்சல் பாடசாலையில் 2022 நவம்பர் மாதம் 07 ஆம் திகதி வெள்ளி மட்ட நீச்சல் பயிற்சியைப் பூர்த்தி செய்தமை.
இணை முக்குளிப்பாளர் ஆரம்பமட்டத்தில் கடல் நீரில் ஆகக் கூடியது 15 அடிகளைப் பூர்த்தி செய்தமை.(2022 ஆகஸ்ட் 01 ஆம் திகதி முதல் 2022 ஒக்தோபர் 31 ஆம் திகதி வரை)
திருக்கோணமலை YANA நீச்சல் பாடசாலையில் 2023 ஜனவரி மாதம் 01 ஆம் திகதி தங்க மட்ட நீச்சல் பயிற்சியைப் பூர்த்தி செய்தமை.
உயிர் காப்பு மற்றும் நீரியல் பாதுகாப்பு தொடர்பான தேசிய நிறுவனமாகிய Sri Lanka Life Saving நிறுவனத்தில் 2023 ஜனவரி 28 ஆம் திகதி நீரியல் பாதுகாப்பு தொடர்பான சான்றிதழொன்றைப் பெற்றுக் கொண்டமை
Sri Lanka Life Saving நிறுவனத்தில் 2023 பெப்ருவரி 01 ஆம் திகதி ILS Junior Life Saver சான்றிதழைப் பெற்றுக் கொண்டமை.
Sri Lanka Life Saving நிறுவனத்தில் 2023 ஜனவரி 28 ஆம் தேதி Sri Lanka Life Saving CPR சான்றிதழை உரித்தாக்கிக் கொண்டமை.
Sri Lanka Life Saving நிறுவனத்தில் 2023 ஜனவரி 28 ஆம் தேதி தொழில் ரீதியான நீச்சலாளர் சான்றிதழை உரித்தாக்கிக் கொண்டமை .
கடல் கீழடி நீர் சுத்திகரிப்பு தொடர்பாக 2023 மார்ச் 19 ஆம் திகதி சான்றிதழை உரித்தாக்கிக் கொண்டமை.
தேசிய தொழில் ரீதியான முக்குளிப்புப் பங்களிப்புப் பாடநெறி (NVDA) NVQ Level 3 ஐ 2023 மே மாதம் 01 ஆம் திகதி முதல் 2023 ஆகஸ்ட் 29 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் பூர்த்தி செய்தமை.
திருக்கோண மலையிலிருந்து சாம்பல் தீவு வரை (8 கிலோ மீட்டர்) தூரத்தை 2023 மே மாதம் 07 ஆம் திகதி Marine Mile Challenge போட்டியில் கலந்து கொண்டு வெற்றி ஈட்டியமை
திருக்கோணமலை பொது வைத்தியசாலைக்கு அருகில் இருந்து சாம்பல் தீவு வரையிலான (15 கிலோமீட்டர்) தூரத்தை 2023 ஆகஸ்ட் 01 ஆம் திகதி கடந்து Marine Mile Challenge போட்டியில் வெற்றி ஈட்டியமை
திருக்கோண மலையில் உள்ள கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தினால் நடாத்தப்பட்ட அகில இலங்கை கடல் நீச்சல் போட்டியில் 2023 ஒக்தோபர் 01 ஆம் திகதி வெற்றியாளராக வந்தமை.
செல்வன் பஹ்மி ஹஸன் சலாமா உயிர் காப்பு மற்றும் இணை முக்குளிப்பு உள்ளிட்ட வேறு நீரியல் ஒழுக்கங்கள் தொடர்பாகவும் அவருக்கே உரித்தான திறமைகளுக்காக வழங்கப்பட்ட சான்றிதழ்களையும் பாராட்டுக்களையும் உரித்தாக்கிக் கொண்டுள்ளார்.
செல்வன் பஹ்மி ஹஸன் சலாமா விளையாட்டுத் துறைக்கு அப்பால் சென்று தனது அர்ப்பணிப்புகளூடாக நீருக்குக் கீழான சுத்திகரிப்புப் பணிகள் மற்றும் கடற் பாதுகாப்புச் செயன்முறைகள் தொடர்பாகவும் தனது நேரடி பங்களிப்பினை வழங்கியுள்ளார். ෆ
பாக்கு நீரிணையை நீந்திக் கடப்பதனூடாக அவர் ஆற்றவுள்ள இப்பயணம் பல ஆண்டுகளாக உடலை வருத்தி மேற்கொண்ட உழைப்பு, தளராத முயற்சி மற்றும் திண்ணமான உறுதிப்பாடு என்பவற்றின் பெறுபேறு எனக் கருதப்படுகின்றது. செல்வன் சலாமா இவ்வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முயற்சியை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்கின்றவிடத்து, அவரது தனிப்பட்ட மனம் கவர் சாதனை மட்டுமன்றி அவரது அச்சமற்ற நீண்ட கால கனவினை மெய்ப்படுத்திக் கொள்வதற்காக அவரது பின்னணியிலிருந்து அணிவகுத்து நின்ற இந்நாட்டின் எதிர்பார்ப்புகள் மற்றும் வாழ்த்துக்கள் என்பவற்றையும் வெற்றிகரமாக ஈட்டிக் கொள்வதற்கான சந்தர்ப்பமும் வாய்க்கப் பெறுகின்றது.
III. சாதனை படைக்கின்ற நீச்சலின் முக்கியத்துவம்
அ. நாடு மற்றும் தனிப்பட்ட ஆளுமை என்பவற்றிற்கா ன முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தல்
பாக்கு நீரிணையை செல்வன் பஹ்மி ஹஸன் சலாமா நீந்திக் கடப்பதென்பது தனிப்பட்ட முறையில் செல்வன் சலாமாவிற்கும் தேசிய ரீதியாக இலங்கை தேசத்திற்குமான மகத்துவம் வாய்ந்த பெருமையாகும்.
செல்வன் சலாமாவிற்கு இந்நீச்சல் வெறுமனே உடலியல் ரீதியான ஒரு சவாலாக மாத்திரமன்றி, அவரது வாழ்நாள் கனவு, ஈடிணையற்ற விருப்பம் என்பவற்றுக்கிடையிலான ஓர் உடன்படிக்கையாகவும் விளங்குகின்றதெனலாம். பாக்கு நீரிணையின் வலுவான நீர்ப் பரப்பை வெற்றி கொள்வதனூடாக விளையாட்டு வரலாற்றில் தனது பெயரை பதிந்து கொள்வதோடு மட்டுமன்றி, இளம் வீரர்கள் தமது அபிலாசைகளை நம்பிக்கையோடும், ஊக்கத்தோடும் தேடிச் செல்வதன் பால் செல்வன் சலாமா ஒரு முன்மாதிரியாக விளங்க முடியும்.
தேசிய மட்டத்திலான அவரது சாதனைகள் இலங்கை மக்களின் மன ஆறுதலினதும் அபிமானத்தினதும் மூலவேராகக் கருத முடியும். இந்த சவால் மிகுந்த முயற்சியை மிக வெற்றிகரமாக நிறைவு செய்து கொள்கின்ற முதல் இலங்கையராக செல்வன் ஹசன் சலாமா பூகோள மேடையிலே எமது நாட்டின் வகிபாகத்தை ஓர் உயர்ந்த மட்டத்தில் கொண்டு செல்வதில் மற்றும் இலங்கை விளையாட்டு வீரர்களுக்கு எல்லையற்ற திறன்களை காட்டுமென்பதில் எவ்வித ஐயமும் இல்லை. இலங்கை நாட்டின் ஆத்மாவை வரைவிலக்கணப்படுத்துவதற்குப் பயன்படுத்தவல்ல விடாமுயற்சி, நிலையான உறுதிப்பாடு மற்றும் இன்னல்களைத் தாங்கிக் கொள்ளும் சகிப்புத் தன்மை தொடர்பான அவரது ஆற்றல் இத்தகைய அடிப்படைப் பெறுமானங்களுக்கான முன்மாதிரிகளாகும்.
மேலும் செல்வன் சலாமாவின் இந்நிறைவேற்றம் தேசிய ஐக்கியம், ஒருமைப்பாடு என்பவற்றைக் கட்டி எழுப்புவதற்கான உணர்வை ஊட்டுவதோடு, சமூக - பொருளாதார நிலைமைகள், சமய ரீதியானதும் இன ரீதியானதுமான தடங்கல்கள் என்பவற்றை துடைத்தெறிவதற்கும் உறுதுணை புரியும்.
Post a Comment