உலக வாழ் மக்களை, திரும்பிப் பார்க்கவைத்த ஓர் ஆளுமை...
சிலருக்குப் பதவிகள் முக்கியம் இல்லை. பதவி இருந்தால் பூமிப்பந்தை உருட்டும் சந்தர்ப்பம் கொடுப்பதாகவே அமையும்.
பதவிகள் எதுவுமின்றி இவ்வளவு சாதனைகளை செய்ய முடியுமாயின் இதற்குத்தான் சாதனை என்போம்.
இவ்வாறு இருக்க இறைவனின் அன்பும் அருளும் வேண்டும். அல்லாஹ்வின் அன்பு இவருக்கு எப்போதும் உண்டாகப் பிராத்திப்போம்.
இவரை இந்த நாட்டுக்கு நன்மைகள் செய்யும் மனிதராக ஆக்கியருள வல்ல இறைவன் உதவி புரிய இரு கரமேந்திப் பிரார்த்திக்கிறோம்
இவர் மரணித்தாலும் மறுமை வரை பேசப்படும் பல ஆக்க பூர்வமான வேலைகளை செய்துள்ளார், செய்து கொண்டும் வருகின்றார். அல்ஹம்துலில்லாஹ்.
உலக வாழ் மக்களை கிழக்கிலங்கையை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்த ஓர் ஆளுமை.
அதி நவீன அமைப்பில் சகல வசதிகளும் கொண்ட அழகிய பல்கலைக்கழகம் ஒன்றை உருவாக்கிக் காட்டியவர்.
இலங்கையில் இருக்கும் எந்த ஒரு அரச பல்கலைக்கழகமும் கூட இந்த அழகிய தோற்றத்தில் இல்லை என்பது உண்மை.
100 ஏக்கர் காணியில் இந்த அழகிய பல்கலைக் கழகத்தை உருவாக்கி சாதித்து காட்டிய ஒரு இலட்சிய வீரன்.
எத்தனையோ அரசியல்வாதிகள் இருந்தும் இப்படி ஒரு வேலையை செய்யவில்லை என்பது உண்மை.
பைத்துல் முகத்தஸின் நினைவை கொண்டு வர காத்தான்குடியில் குப்பதுஸ்ஸஹ்ரா ஒன்றை அமைத்து இலங்கையின் அனைத்து ஊர்களிலிருந்தும் இன, மத,பேதமின்றி பார்த்து மகிழ வைத்திருப்பது ஒரு உண்மையில் சாதனைதான்.
இதற்கு முன்னர் அதி நவீன அமைப்பில் அழகியதொரு தொல்பொருள் நிலையத்தை உருவாக்கிய பெருமையும் இவருக்கு உண்டு.
தனக்கு வாக்களித்த மக்களுக்கு தன்னால் முடிந்த விடயங்களை செய்து வரும் நிலையில் சாதாரண அரசியல் வாதிகளால் முடியாத பல விடயங்களையும் சாதித்துக் காட்டிக் கொண்டிருக்கும் ஒரு சிறந்த செயல் வீரன் என்ற பெருமைக்கு இவர் தகுதியானவர்.
எந்த மனிதனுக்கும் விமர்சனங்கள் இல்லாமல் இல்லை. விமர்சனங்கள் எதுவும் இல்லாதவன் எதனையும் சாதிக்காதவன் என்பது உண்மை.
சாதிக்கத் துடிக்கும் ஒருவன் சமூகத்தால் சில போது சோதிக்கப்படுவான் என்பதும் உண்மை.
ஒரு மனிதன் செய்த விடயங்களை புகழ்வது அங்கீகரிப்பது மனிதப் பண்பு என்ற அடிப்படையில் இவரது சாதனைகளை நான் மெச்சுகின்றேன்.
தன் ஆயுள் காலத்தை வரலாறாக மாற்றி தான் மரணிக்கும் போது நான் மரணிக்கவில்லை இந்த உலகம் அழியும் வரை நினைவு படுத்தப்பட்டுக் கொண்டிருப்பேன் என்ற உத்வேகத்தோடு பல்வேறு சவால்களுக்கு மத்தியில் தன் பணிகளை இவர் செய்து கொண்டு வருகின்றார் என்பது மட்டும் உண்மை.
இவரைப் போற்றுபவர்களும் உள்ளனர். இவரை தூற்றுபவர்களும் உள்ளனர்.
அரசியல்வாதியானால் இத்தகைய விமர்சனங்களை சந்திக்காமல் இருக்க முடியாது.
இவரை மக்கள் தோற்கடித்தாலும் இவர் அரசியலில் தோற்றுப் போனாலும் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருக்கிறார் என்பது மட்டும் உண்மை.
அரசியல் குரோதங்களோடு இவரை பார்க்கும் பலர் இவரது சாதனைகளைக் கொச்சைப்படுத்துவர், ஏற்றுக்கொள்ள தயங்குவர் என்பதில் சந்தேகமில்லை.
நாம் இன்று பலரை செயல் வீரன், மாபெரும் ஆளுமை என்று எதை வைத்து சொல்கிறோம் என்று ஆச்சரியம்!
அவரது உடம்பைப் பார்த்தா? அல்லது அவரது அழகைப்பார்த்தா? அல்லது அவரது பொருளாதாரத்தைப் பார்த்தா?
ஆளுமைக்கு வரைவிலக்கணம் முன்னாள் அமைச்சர் மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் என்று கூறும் அளவு வேலைகள் செய்துள்ளார். சேவைகள் செய்துள்ளார். இவரை மிகவும் ஆளுமையுள்ள அரசியல் தலைவர் என்று கூறுவதில் தயக்கம் வருவதில்லை.
ஒரு மனிதனின் வாழ்வு சேவையாகவும் மரணம் சாட்சியாகவும் அமைய வேண்டும். மட்டுமன்றி மரணம் சரித்திரமாக அமைய வேண்டும்.
"நீங்கள் வேலை செய்யுங்கள் அல்லாஹவும் அவனது தூதரும் உங்களது செயல்களை பார்ப்பார்கள்" (அல் குர் ஆன்)
இந்த அடிப்படையில் நாம் மனிதர்களை நோக்குவோம். அவர்களது சேவைகளை மெச்சுவோம்.
இவர் வெறுமனே வாழ்ந்து விட்டு செல்ல நினைக்கவில்லை இவரது வாழ்வு அர்த்தம் உள்ளதாகவும் இவரது மரணம் சரித்திரமாகவும் அமைய வேண்டும் என்று துடிக்கும் ஒரு அரசியல்வாதி என்பதில் சந்தேகம் இல்லை.
Post a Comment