நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கம் - வாழ்க்கையில் முதல் அனுபவத்தை உணர்ந்த மக்கள்
இலங்கையில் வவுனியாவை அண்மித்த பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு 2.3 மெக்னிடியூட் அளவிலான நில அதிர்வு பதிவாகி உள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
மஹகனந்தராவ, ஹக்மன மற்றும் பல்லேகலை நில அதிர்வு நிலையங்களில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
வவுனியா மற்றும் மதவாச்சியின் பல கிராமங்களில் 2.3 ரிக்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டதாக புவிச்சரிதவியல், நில அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
இதனால் சேதங்கள் ஏதும் ஏற்படாத நிலையில் மக்கள் தங்களது வீடுகளில் ஜன்னல்கள் கதவுகள் சில நொடிகள் பலத்த சத்தத்துடன் அதிர்ந்ததாக தெரிவிக்கின்றனர்.
மேலும் வாழ்க்கையில் முதன் முறையாக இதுபோன்ற அனுபவத்தை உணர்ந்ததாகவும் தெரிவித்தனர்.
இதேவேளை, நேற்று இரவு 11.01 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment