Header Ads



ரணிலின் அரசியல் சூழ்ச்சி தோற்கடிக்கப்பட்டது


சட்டமா அதிபர் சஞ்ஜய் ராஜரத்தினத்தை பிரதம நீதியரசராக நியமித்து தனக்கு ஏற்றாற் போல் சட்ட செயற்பாடுகளை முன்னெடுக்க மேற்கொண்ட அரசியல் சூழ்ச்சியை அரசியலமைப்பு பேரவை தோற்கடித்து விட்டதாக தயாசிறி ஜயசேகர எம்.பி. தெரிவித்தார்.


பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற சுற்றுலாத்துறை ,காணி அமைச்சு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் கட்டளைகள் மீதான ஒழுங்குவிதிகள்  மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு  பேசுகையில்,  


 சட்டமா அதிபர் விவகாரத்தில் புதிய விடயங்கள் இடம்பெறுகின்றன.சுதந்திரத்தின் பின்னரான காலப்பகுதியில் பதவி வகித்த  சட்மா அதிபர்களின்  பதவிக்  காலம் ஒருபோதும் நீடிக்கப்படவில்லை.தற்போதைய சட்டமா அதிபரின் பதவி காலத்தை நீடிக்க அனுமதி வழங்குமாறு ஜனாதிபதி விடுத்த பரிந்துரையை இரண்டு முறை ஆராய்ந்து அரசியலமைப்பு பேரவை அந்த பரிந்துரையை நிராகரித்துள்ளது.


 பிரதம நீதியரசர் ஓரிரு மாதங்களில் சேவையில் இருந்து ஓய்வு  பெறுவார்.தற்போதைய சட்டமா அதிபரை பிரதம நீதியரசராக நியமித்து சட்டத்தை தமக்கு ஏற்றாற்  போல் செயற்படுத்திக் கொள்வதற்கு முன்னெடுக்கப்பட்ட அரசியல் சூழ்ச்சியை அரசியலமைப்பு பேரவை தற்றுணிவுடன் தோற்கடித்துள்ளது.


ஜனாதிபதி பதவிக்  காலம் நிறைவடையும் தருணம் நெருங்கி வரும் போது ஜனாதிபதி ஏதாவதொரு வழியில் தனது இருப்பை தக்கவைத்துக் கொள்ள முயற்சிக்கிறார்.அரசியலமைப்பு பேரவை   சுயாதீனமாக செயற்பட்டால்  நிறைவேற்றதிகாரத்தின் தன்னிச்சையான தீர்மானங்களை தடுக்க முடியும் என்பது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றார். 

No comments

Powered by Blogger.