Header Ads



உடல்களை பலவந்தமாக தகனம் - மன்னிப்பு கேட்கும் ரணில்


கொரோனா  காலப்பகுதியில் உடல்களை தகனம் செய்ததன் மூலம்   முஸ்லிம் மக்களுக்கு பாரியளவில் மனம் புண்படும் நிலைமை ஏற்பட்டமை தொடர்பில் முஸ்லிம் மக்களிடம் மன்னிப்பு கோருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.


கொரோனாவினால மரணித்தோரின் உடல்கள் தகனம் செய்யப்பட்டமை தொடர்பில், பாராளுமன்றத்தில்   செவ்வாய்க்கிழமை (18)  இடம்பெற்ற வாதப் பிரதிவாதத்தின் போதே இவ்வாறு தெரிவித்த ஜனாதிபதி மேலும் கூறுகையில்,


இந்த நாட்டில் யாருக்கு வேண்டுமானாலும்  தங்களது உடலை  அடக்க வேண்டுமா தகனம்   வேண்டுமா என்பது தொடர்பில் தீர்மானிக்கும் உரிமை இருக்க வேண்டும். அதனால் மரணித்த நபர் ஒருவரின் சடலத்தை நல்லடக்கம் செய்தல், தகனம் செய்தல் அல்லது சடலத்தை வைத்திய பீடத்துக்கு வழங்குதல் தொடர்பான உரிமையை வழங்குதல் தொடர்பில் சட்டம்   விடயத்துக்கு பொறுப்பான அமைச்சரினால் கொண்டுவரப்படவுள்ளது.


கொரோனா  காலப்பகுதியில் உடல்களை தகனம் செய்ததன் மூலம்  பிரதானமாக முஸ்லிம் மக்களுக்கு பாரியளவில் மனம் புண்படும் நிலைமை ஏற்பட்டது. என்றாலும் மரணத்திற்கு பின்னர் நல்லடக்கம் செய்வதற்கு விருப்பமான இந்து. பெளத்த மற்றும் கிறிஸ்தவ மக்களும் இருக்கிறார்கள். அதனால் ஏற்பட்ட விடயம் தொடர்பில் நாங்கள் அவர்களிடம் மன்னிப்பு கோருகிறோம்.


அதேபோன்று இது தொடர்பாக சமர்ப்பிக்கப்படும் சட்டமூலத்துக்கு இந்த சபையில் அனைவரும் ஆதரவளிப்பார்கள்  என நான் நம்புகின்றேன் என்றார்.

No comments

Powered by Blogger.