Header Ads



உண்பதற்கும் குடிப்பதற்கும் தனக்குச் சொந்தமான அனைத்தையும் விற்று பிழைப்பது எவரும் செய்யக்கூடியதாகும்


எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று(30) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்த கருத்துக்கள்;


கடன் மறுசீரமைப்பிலிருந்து அர்ஜென்டினா 51% ,  கானாவுக்கு 38% நிவாரணம் கிடைத்தாலும்,  இலங்கை 28% கோரியும் 7% கிடைத்துள்ளது.


நிதி அமைச்சின் தரவு அறிக்கைகளின் பிரகாரம், 2024 மார்ச் மாத இறுதியில் இலங்கையின் மொத்தக் கடன் 100.2 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.


இதன் பிரகாரம், உள்நாட்டுக் கடன் 57.3 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவும், இருதரப்புக் கடன் 37 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவும், வங்கிகள் மற்றும் அரச நிறுவனங்கள் ஊடாக பெறப்பட்ட கடன்கள் 5.9 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும் என சுட்டிக்காட்டினார். மொத்த வெளிநாட்டுக் கடனில் 23% மட்டுமே மறுசீரமைக்கப்படுவது எவ்வாறு நற் செய்தியாக அமைய முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ் எம் மரிக்கார் கேள்வி எழுப்பினார்.


மேலும், சம்பந்தப்பட்ட இணக்கப்பாட்டின் பிரகாரம், எமது நாட்டிற்குக் கிடைக்கும் கடன் நிவாரணம் என்ன? அது எவ்வளவு? மீளச் செலுத்தவதற்கு இணங்கிக்கொண்ட செயல்முறை என்ன? இதுவரை செலுத்தப்படாத தவணைகள் என்ன செய்யப்படும்? நாட்டிற்கு பெரும் சுமையாக இருக்கும் வணிகக் கடன்களின் நிலை என்ன? இது குறித்த தகவல்கள் பாராளுமன்றத்தில் கூட இதுவரை எதுவும் தெரிவிக்கப்படவில்லை.


இவ்வாறான பின்னணியில், நாட்டுக்கு மிகவும் கேடு விளைவிக்கும் இரகசியத் தனமான இணக்கப்பாட்டுக்கு ஜூலை 2 அல்லது 3 ஆம் திகதி பாராளுமன்ற அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்பது வெறும் அரசியல் முடிச்சு.


உண்பதற்கும் குடிப்பதற்கும் தனக்குச் சொந்தமான அனைத்தையும் விற்று பிழைப்பது எவரும் செய்யக்கூடிய எளிய செயலாகும். இதன் முடிவு மிகவும் ஆபத்தானது. கடன் மறுசீரமைப்பு தொடர்பான இணக்கப்பாடும் முன்மொழிவும் முற்றிலும் தவறானவை. இலங்கை கோரிய கடன் நிவாரணம் 28% எனவும், இதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினர் உடன்படவில்லை என்பதும் இங்கு தெரியவந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். 


வெளிநாட்டு பங்குதாரர்களால் எமது நாட்டுக்கு வழங்கப்பட்ட கடன் சலுகை 7% மட்டுமே எனத் தெரிவிக்கப்படுகிறது. கடன் மறுசீரமைப்பிலிருந்து அர்ஜென்டினாவிற்கு 51%, கானாவுக்கு 38% நிவாரணம் கிடைக்கும் போது இலங்கை 28% கோரியும் 7% கிடைத்துள்ளது. ​​​​ஏனைய நாடுகள் இவ்வாறான சலுகுகளைப் பெறும்போது, ஒரு நபரின் தேர்தல் அபிலாஷக்காக நாட்டின் எதிர்காலத்தை அடகு வைத்து அரசியல் ஆதாயம் பெற அரசாங்கம் இதைச் செய்கிறது.


இரு தரப்பு வெளிநாட்டுக் கடன் வழங்குநர்கள் மிகக் குறைந்தளவு கடன் நிவாரணம் வழங்கியதற்கு இலங்கை முன்வைத்த இணக்கப்பாட்டு யோசனையில் கூறப்பட்டுள்ள விடயங்களே காரணம். குறித்த இணக்கப்பாடு, அமெரிக்க டொலர் வருமானத்தை விடுத்து இலங்கை ரூபா வருமானத்தை அடிப்படையாகக் கொண்டே குறிப்பிடப்பட்டுள்ளது. சாதாரண மக்களைப் பிழிந்தே இலங்கை ரூபா வருமானத்தை இதுவரை அதிகரித்துள்ளது. 


நாட்டவர் உண்பது, குடிப்பது, தண்ணீர் மற்றும் மின்சாரக் கட்டணம் மற்றும் சம்பாதிக்கும் சம்பளத்தில் இருந்தும் கூட நாட்டிற்கு அசாதாரணமான தொகையை வழங்கியே இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 


22 மில்லியன் இலங்கையர்களும் அவ்வாறு வரி செலுத்தும் போது, ​​அர்ஜென்டினா அல்லது கானா போன்று கடன் நிவாரணம் பெற முயற்சிக்காமல் அரசாங்கம் ஏன் இதில் அவசரப்படுகிறது? இதற்கு ஒரே காரணம் தேர்தலில் ஒருவர் போட்டியிடுவதுதான். அந்த நபரின் பிரச்சாரம் மற்றும் வேட்புமனு மட்டுமே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் காரணங்களால், பொருத்தமான முன்மொழிவோ, உடன்படிக்கையோ இல்லாமல், முறையான ஆய்வுகளோ, விவாதமோ இல்லாமல், நம் நாட்டின் 22 மில்லியன் மக்களுக்குக் கிடைக்கக் கூடிய கடன் நிவாரணப் பலன் தவறிவிட்டப்பட்டுள்ளது.


தற்போது இலங்கை எதிர்நோக்கும் பிரதான பிரச்சினை பொருளாதார மந்தநிலை எனவும், அதனை சரிசெய்வதற்கான பொன்னான சந்தர்ப்பம் அரசியல்மயப்படுத்தல் ஊடாக பாரபட்சமாக முடிவுக்கு வந்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கருத்துப்படி, வரிகளை அதிகரித்து நாட்டை விற்பதன் மூலம் இந்த பொருளாதார சவாலை வெற்றிகொள்ள முடியாது. இந்த பெருந்தொகை கடனை அடைப்பதுடன் மக்களை கடன் பொறியில் இருந்து விடுவிப்பதும் ஆட்சியாளரின் பாரிய பொறுப்பாகும். அதை நிறைவேற்ற, நாம் இன்னும் நடைமுறை ரீதியிலான, முறையான மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட பொருளாதார ஒழுங்குகளை பின்பற்ற வேண்டும்.


வெளிநாட்டுத் தொழிலாளர்களிடம் இருந்து வரும் பணத்துக்கும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடமிருந்து கிடைக்கும் பணப்பரிவர்த்தனைக்குமாக சிரமப்படுவதை விட ஏற்றுமதியின் அளவை அதிகரிக்கத் திட்டமிட வேண்டும்.

No comments

Powered by Blogger.