Header Ads



தினக்குரலுக்கு ஜனாதிபதி தங்க விருது, பரிசு பெற்றார் ஹுஸ்னா


இலங்கையின் சுற்றாடலை  பாதுகாக்கும் நோக்கில் மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட "ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருதுகள் - 2024" விருது வழங்கும் விழா   வெள்ளிக்கிழமை  காலை 10 மணிக்கு     பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்   ஜனாதிபதி  ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றபோது  "ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருதுகள் - 2024" க்கான தங்க விருதை தினக்குரல் பெற்றுக்கொண்டது 


சுற்றுச்சூழல் விருதுகள் - 2024" க்கான தங்க விருது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் தினக்குரல் உதவி ஆசிரியர் எம்.எச்.எப் ஹுஸ்னாவுக்கு வழங்கப்பட்டது.  கடந்த வருடம் சுற்று சூழலுக்கான வெண்கல  விருதை வென்ற ஹுஸ்னா இம்முறை தங்க விருதை வென்றுள்ளார் . கொழும்பு 12 ஐச் சேர்ந்த இவர்  ஆசிரியர் ஜெம்சித் அஸீஸ் நளீமியின்  மனைவியும் இஹ்ஸானிய்யா அரபுக் கல்லூரி முன்னாள் அதிபர் மர்ஹும் மௌலவி எம்.இசட் எம் ஹுசைன்-ஜெனீஹா  தம்பதிகளின் மகளுமாவார்.


 இந்நிகழ்வில்,  சுற்றாடல் இராஜாங்க அமைச்சர்  ஜனக வக்கம்புர,  சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் எஸ்.  வியாழேந்திரன்  ,   சுற்றுச்சூழல் அமைச்சின் செயலாளர்,மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர்  வேணுர பெர்னாண்டோ,மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம்   ஹேமந்த ஜயசிங்க  சீனா, எகிப்து, இந்தியா,  அமெரிக்கா, பாகிஸ்தான், பங்களாதேஷ்,  ஐக்கிய இராச்சியம்,  கனடா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளின் தூதுவர்கள்   ,  சிங்க உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர் 


இந்த ஆண்டு, ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருதுகளுக்கு 901 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவற்றில்,  தங்கம், வெள்ளி, வெண்கலம் மற்றும் தகுதி போன்ற பிரிவுகளுக்கு  124 போட்டியாளர்கள்   ஜனாதிபதி விருதுகளை வென்றுள்ளனர்.

No comments

Powered by Blogger.