Header Ads



ஆணுறுப்பில் சேரும் பிளாஸ்டிக், மொத்தமாக செயலிழந்துவிடுமென ஆய்வாளர்கள் எச்சரிக்கை


ஆணுறுப்பில் பிளாஸ்டிக் இருப்பதை அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அங்கு இருக்கும் இந்த மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் விறைப்புத்தன்மை பாதித்து ஆணுறுப்பைச் செயலிழக்க வைக்கவும் கூட வாய்ப்புகள் இருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள். நாம் சாப்பிடப் பயன்படுத்தும் பிளாஸ்டிக் மூலமாகவே இவை உடலுக்குள் செல்வதாகவும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.


இப்போது உலகில் கிட்டதட்ட எங்குப் பார்த்தாலும் பிளாஸ்டிக் என்றே இருக்கிறது. பிளாஸ்டிக் மூலம் சில நன்மைகள் இருந்தாலும்.. அதனால் சரி செய்யவே முடியாத பல தீமைகளும் இருக்கவே செய்கிறது.


பிளாஸ்டிக் பிரச்சினையைச் சரி செய்ய முயற்சிகள் நடந்தாலும் அவை பெரியளவில் கை கொடுக்கவில்லை. இந்த பிளாஸ்டிக் பிரச்சினை அடுத்த கட்டத்திற்குச் சென்றுவிட்டதைக் காட்டும் நிகழ்வு ஒன்று இப்போது நடந்துள்ளது.


ஆணுறுப்பு: அதாவது முதன்முறையாக ஆணுறுப்பில் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.. இது விறைப்புத்தன்மையை கூட பாதிக்கும் ஆபத்துகள் இருப்பதாகப் பிரிட்டனைச் சேர்ந்த தி கார்டியன் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. யுவர் செக்சுவல் மெடிசின் ஜர்னலில் இது தொடர்பான ஆய்வு முடிவுகளும் வெளியாகி இருக்கிறது.


விறைப்பு தன்மையில் பிரச்சினை இருக்கும் 5 ஆண்கள் இதற்கான அறுவை சிகிச்சை செய்யவிருந்தனர். அவர்களின் ஆணுறுப்பில் இருந்து திசுக்களைச் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். அதில் 0.5 மிமீ முதல் 0.002 மிமீ மைக்ரோபிளாஸ்டிக்ஸ் இருந்துள்ளதைப் பார்த்து ஆய்வாளர்கள் மிரண்டு போய் விட்டார்கள்.


விறைப்புத்தன்மையின் போது ஆண் குறியில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும் நிலையில், அப்போது அங்கு மைக்ரோபிளாஸ்டிக்ஸ் சேர்ந்து இருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மைக்ரோபிளாஸ்டிக்ஸ் என்பது வெறும் கண்களால் பார்க்கவே முடியாத அளவுக்கு மிகவும் சின்ன சைஸில் இருக்கும் பிளாஸ்டிக் துகள்களாகும்.


இந்த மைக்ரோபிளாஸ்டிக்ஸ் நாம் சாப்பிடும் போது, தண்ணீர் மற்றும் இதர பானங்களைக் குடிக்கும் போது நமது உடலுக்குள் நுழைகின்றன.. ஏற்கனவே இவை நமது ரத்த ஓட்டத்தில் கண்டறியப்பட்டுள்ளன. கடந்த 2022ல் முதன்முறையாக மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் நமது ரத்த ஓட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. ரத்தக் குழாய்களில் மைக்ரோபிளாஸ்டிக் உள்ள நோயாளிகளுக்குப் பக்கவாதம், மாரடைப்பு என முன்கூட்டியே மரணம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக இந்தாண்டு மார்ச் மாதம் வெளியான ஆய்வுகளில் தெரிய வந்தது.


இப்படி ரத்த ஓட்டத்தில் மைக்ரோபிளாஸ்டிக் முன்பே கண்டுபிடிக்கப்பட்ட போதிலும், ஆணுறுப்பில் அவை கண்டுபிடிக்கப்படுவது இதுவே முதல்முறை.. PET மற்றும் பாலிப்ரோப்பிலீன் வகை மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை பொதுவாக உணவு மற்றும் கூல்டிரிங்கிஸ் உள்ளிட்ட பானங்களை பேக்கேஜிங் செய்ய பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த ஆய்வுக்குத் தலைமையேற்ற அமெரிக்காவின் மியாமி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கூறுகையில், "ஆணுறுப்பு ஒரு நரம்புகளால் ஆன.. பஞ்சுபோன்ற உறுப்பாகும்.. இது எளிதாகப் பாதிக்கும் வாய்ப்பு இருக்கிறது. விறைப்புச் செயலிழப்பிற்குப் பல காரணங்கள் இருப்பது நமக்குத் தெரியும். பொதுவாக விறைப்புத்தன்மை ஏற்பட உங்களுக்கு நல்ல ஹார்மோன்கள், நரம்புகள், ரத்த ஓட்டம் தேவை.


அத்துடன் குறிப்பாக நல்ல மென்மையான தசை திசுக்கள் தேவை தேவை. அப்படி இருக்கும் போது ஆணுறுப்பில் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் படிவது அதைப் பாதிக்கலாம். இதை நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. இது மென்மையான தசையைப் பாதிக்கும். இதனால் ஆணுறுப்பு செயலிழந்து போகவும் வாய்ப்பு இருக்கலாம் எனச் சந்தேகிக்கிறோம்.


உடலில் மைக்ரோபிளாஸ்டிக் கலப்பது உண்மையாகவே பெரிய பிரச்சினை தான்.. பிளாஸ்டிக் பாட்டில் மூலம் தண்ணீர் குடிக்கும் போது.. பிளாஸ்டிக் பாக்ஸ்களில் உணவு பார்சல் வாங்கும் போது.. நம் உடலில் மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் சேர்கிறது. அது ஆண் குறி வரை வந்துவிட்டது.. இது மோசமான பிரச்சினை என்பதை மக்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்" என்றார்.

No comments

Powered by Blogger.