ரணிலை மீண்டும் ஜனாதிபதியாக்க நினைப்பவர்களை, மோசமாக வர்ணித்துள்ள அனுரகுமார
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் ஜனாதிபதியாக வேண்டும் என நினைப்பவர்கள் மனிதர்களாக இருக்க முடியாது என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மொட்டு கட்சியின் சிலருடன் இணைந்து ரணில் வழமையான கபட அரசியலுக்கு உயிர்ப்பூட்ட முயற்சிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
கண்டியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றுகையில் அவர் இந்த விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளார்.
கடன் பிரச்சினையிலிருந்து நாடு மீட்டெடுக்கப்பட்டதாக ரணில் விக்ரமசிங்க கூறிய போதிலும் உண்மை அதுவல்ல எனவும் அவர் கூறியுள்ளார்.
அரசாங்க வருமானம் மற்றும் அந்நிய செலாவணியை அதிகரித்துக்கொள்வதே இந்த பிரச்சினைக்கு தீர்வாக அமையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த இரண்டு ஆண்டுகளில் அரச வருமானத்தை அதிகரிக்கவும், அந்நிய செலாவணியை அதிகரிக்கவும் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.
Post a Comment