அரேபிய பெண்ணாக மாறுவேடமிட்ட, காசாவில் விடுவிக்கப்பட்ட இஸ்ரேலிய சிப்பாய்
காசாவில் அல் நுசிராத் படுகொலையின் போது இன்று விடுவிக்கப்பட்ட இஸ்ரேலிய சிப்பாய் நோவா அர்கமானி, சுரங்கப்பாதையில் வைக்கப்படவில்லை என்றும், அவ்வப்போது காற்றை சுவாசிக்க வெளியே சென்று அரேபிய பெண்ணாக மாறுவேடமிட்டதாகவும் இஸ்ரேலிய யெனெட் தெரிவித்துள்ளது.
இரண்டு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் அவர் மற்ற இரண்டு கைதிகளுடன் இருந்த இடங்களை இஸ்ரேல் குண்டுவீசித் தாக்கியது குறித்து கருத்து தெரிவித்த ஆர்கமணி,
'ஏவுகணை வீட்டிற்குள் நுழைவதை நான் பார்த்தேன், நான் இறந்துவிடுவேன் என்று உறுதியாக நான் நினைத்தேன் ஆனால் நான் உயிருடன் இருந்தேன். .'
இஸ்ரேலிய தாக்குதல்களில் கைதிகளான யோசி ஷராபி மற்றும் இடி சபிர்ஸ்கி ஆகியோர் ஏற்கனவே கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment