Header Ads



நீங்கள் அவதானித்துப் பார்க்க வேண்டாமா..?


உலகில் மிகச்சிறிய பறவையாக கருதப்படும் "பீ ஹம்மிங்பேர்ட்" தேனி ஓசனிச்சிட்டு என்ற பறவை கியூபா தீவிகளில் உள்ள அடர்ந்த காடுகளில் காணப்படும் அழகான பறவை இனமாகும்.


இதன் நீளம் வெறுமனே 5 செ.மீடரும், இடை 2 கிராமுக்கும் குறைவாகவே இருக்கும். நிமிடத்துக்கு 1,200 இதயத் துடிப்பு என்ற அடிப்படையில் அதி துரித இதயத் துடிப்பைக் கொண்ட உயிரினமாக கருதப்படுகிறது. வினாடிக்கு சுமார் 80 இறக்கை துடிப்புகள் என்ற விகிதத்தில் அதி வேக இறக்கை துடிப்பு கொண்ட பறவையாக உள்ளது.

ஒரு மணித்தியாலத்துக்கு 45 கிமீ வேகத்தில் பறக்கும் ஆற்றல் கொண்ட இப்பறவை சுமார் 800 கிமீ தூரம் வரை இடைவிடாது பறக்கும் ஆற்றல் கொண்டது.


புற ஊதா கதிர்களை பார்க்கும் வல்லமை கொண்டுள்ளதோடு மலர்கள் இருக்கும் இடங்களையும் அதிலே இரசம் ஊறும் பருவ காலங்களையும் நுணுக்கமாக நினைவில் வைத்திருக்கும். தனக்குத் தேவையான புரத ஊட்டச்சத்தை எடுக்கவென சிறிய பூச்சி வகைகளை உணவாக உட்கொள்கின்றது.

நீங்கள் அவதானித்துப் பார்க்க வேண்டாமா..?

افلا_تبصرون

தமிழாக்கம் / imran farook

No comments

Powered by Blogger.