காஸா மக்களுக்கு எதிராக, இஸ்ரேல் புரிந்த மனித தன்மையற்ற கொடூரங்கள் - அம்மபலமாக்கியுள்ள நவநீதம்பிள்ளை
இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் தொடர்பாக இந்திய வம்சாவளியும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் முன்னாள் தலைவருமான நவநீத பிள்ளை தலைமையில் உயர்மட்ட குழு விசாரணை மேற்கொண்டது.
காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களை முற்றாக கொன்றழிக்க இஸ்ரேல் முயன்றதாக அந்த குழுவின் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய ராணுவத்தினர் காசா பெண்களை பாலியல் சித்ரவதை செய்ததோடு, பாலஸ்தீனிய ஆண்கள் மற்றும் இளைஞர்களை பாலின ரீதியாக துன்புறுத்தியதாகவும் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைகளை துண்டித்தல், உடல் உறுப்புகளை துண்டித்தல், நிர்வாணப்படுத்துதல் மற்றும் இறந்தோரின் உடல்களுக்கு அவமரியாதை செய்தல், எரித்தல் போன்ற செயல்களில் இஸ்ரேல் ராணுவம் ஈடுபட்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மற்றும் சர்வதேச மனித உரிமைச் சட்டங்களை மீறியதோடு, இஸ்ரேல் ராணுவம் போர் குற்றம் புரிந்துள்ளதாகவும் ஐ.நா. விசாரணைக்குழு அறிக்கையில், புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹமாஸ் இயக்கத்தினரும் போர் குற்றம் புரிந்ததாக குற்றம் சாட்டி இருக்கும் ஐ.நா.விசாரணைக்குழு தனது அறிக்கையை அடுத்த வாரம் ஐ.நா. மனித உரிமை கவுன்சலில் தாக்கல் செய்துள்ளது.
Post a Comment