Header Ads



முஸ்லிம்கள் சார்பாக உண்மைத்தன்மைகள் வெளிப்படுத்த வேண்டும்


அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணி சம்மேளனத்தின் தேசியத் தலைவர் சாம் நவாஸ் தலைமையில் சிரேஷ்ட சட்டத்தரணிகளும் அடங்கிய குழுவொன்று   வெளிநாட்டு இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய 31.05.2024 வெளிநாட்டு அமைச்சில் வைத்து சந்தித்தது .


கடந்த வாரம் இந்தியாவில் அகமதாபாத்தில் வைத்து கைது செய்யப்பட்ட 4 இலங்கையர்கள் வைத்து புனையப்பட்ட தொரு கதையாகும்.  கைது செய்யப்பட்டவர்கள்  ஜ.எஸ்.எஸ் மத தீவிரவாதிகள் என சாயம் பூசப்பட்டு  உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஊடகங்கள் வாயிலாகவும் இச் சம்பவம் பிரச்சார படுத்தப்பட்டது. 


இது ஓர்  புனையப்பட்ட தொரு கதையாகவும். இந்தியாவில் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் தேர்தலை முன்னிட்டு அரசியல் இலாபம் கருதி அடிக்கடி இவ்வாறான சம்பவங்கள் தேர்தல் காலத்தில்  புனையப்பட்டு வந்துள்ளது.. இதற்காகவே இந்தியாவின்  அகமதாபாத்தில் 4 இலங்கை முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்ட தெரு சம்பவமாகவே இதனைக் பார்க்கின்றோம்.  


இச்செயலால் இலங்கை வாழும் முஸ்லிம் மற்றும் இலங்கையர்கள் மத்தியில் சந்தேகம் மற்றும் புரிந்துணர்வுடன் வாழும் மக்களை குழப்புவதற்கு சில சக்திகள் முயற்சிக்கலாம்.  இவ்வாறான விடயங்கள் களையப்பட வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் எந்த நோக்கத்திற்காக கைது செய்தார்களோ அவற்றினை இலங்கை அரசாங்கம் விசாரணை செய்து அவற்றினை வெளிப்படுத்தல் வேண்டும்.


அத்துடன் இலங்கையர்கள் இந்தியாவுக்கு சுற்றுலாப் பிரயாணிகளாகவும், வியாபார நோக்கத்திற்காகவும் பல தசாப்த காலமாக இந்தியா செல்கின்றனர். இந்திய இலங்கை வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். . மேற்படி சம்பவத்தில் இலங்கை -இந்திய சுற்றுலா மற்றும் பொருளாத்துறைகள் இலங்கையில்  பாதிக்கப்படும் எனவும்  தூதுக்குழுவினர் வெளிநாட்டு இராஜாங்க அமைச்சர் அமைச்சின் அதிகாரிகளுடனும் இலங்கை முஸ்லிம்கள் சார்பாக உரிய சந்தேகங்களை கிளர்ந்து உண்மைத்தன்மைகள் வெளிப்படுத்த வேண்டும் எனவும் வேண்டிக் கொண்டதாக அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தின் தேசியத் தலைவர் சாம் நவாஸ் தெரிவித்தார்.


அதே வேளை நேற்று முன்தினம் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், இந்தியாவில் கைது செய்யப்பட்டவர்கள் மத தீவிரவாதிகள் ஜ.எஸ்.எஸ் அமைப்பினர் அல்லர் அவர்கள் போதைப்பொருள் வியாபாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் என தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.


(அஷ்ரப் ஏ சமத்)


No comments

Powered by Blogger.