இருப்புக்கான போராட்டம்
படத்தை மேலோட்டமாக பார்க்கும் போது ஒரு கரடி சால்மன் வகை மீனை வேட்டை ஆடுவவது போன்றே தோன்றும். ஆனால் சற்று உன்னிப்பாக அவதானித்தால் 'வாழ்வா சாவா என்ற உள்ளுணர்வுப் போராட்டம் ஒன்று இங்கே நடப்பதை நன்கு அவதானிக்க முடியும்.
பல மில்லியன் ஆண்டுகள் பாரம்பரியத்தைக் கொண்ட இந்த சாலமன் மீன், பல ஆண்களாக ஊர் விட்டு, ஊர் இடம் பெயர்ந்து வந்து இங்கே முட்டையிட்டு, இனப்பெருக்கம் செய்துவிட்டு இந்த நதியில் சமாதியாவதே இயல்பானதாகும்.
ஆனால் இங்கே மரணம் நிச்சியமாகிவிட்டது என்று அது உணர்ந்த நொடிப்பொழுதில், தனது முட்டைகளை கக்கி ஆற்றில் விட்டு தனது இனத்தின் இருப்பையாவது காக்க வேண்டும் என்ற ஒரு போராட்டம் இங்கே நடைபெறுகின்றது.
அதன் வாயிலிருந்து செம்மை நிற துளிகள் வடிவில் சிதறி விழுவதுதான் அது விட்டுச் செல்லும் அதன் முட்டைகள், இல்லை அதன் இருப்புக்கான அடையாளங்கள்.
ஆண்டவன் படைத்த படைப்பினங்கள் யாவற்றிலும், இனத்தின் இருப்புக்கான போராட்ட உள்ளுணர்வை அவன் வைத்ததால்தான் இன்று வரை, இந்த பூலோகம் ஓடிக்கொண்டிருக்கின்றது. அதிலே உயிரினங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
✍ தமிழாக்கம் / imran farook
Post a Comment