நான் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவது உறுதி - ஒழுக்காற்று நடவடிக்கைக்கு தயாராகிறது பொதுஜன பெரமுன
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தாம் களமிறங்குவது உறுதியென அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஸ தெரிவித்தார்.
கொடகமையில் இன்று (07) இடம்பெற்ற ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஏற்பாட்டாளர்களுடனான சந்திப்பில், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனை கூறினார்.
எவ்வாறாயினும், தமது கட்சியில் இருந்து கொண்டு வேறு கட்சியின் தலைமைத்துவத்தை பெற்றுக்கொண்டமை தொடர்பில், அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய ஒருங்கிணைப்பாளராக ரோஹித அபேகுணவர்தன இன்று நியமிக்கப்பட்டார்.
கட்சியின் நிறைவேற்றுச் சபை மற்றும் அரசியல் குழு கூட்டத்தில் இந்த நியமனம் வழங்கப்பட்ட நிலையில், அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸவிற்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பில் சாகல ரத்நாயக்கவினால் கருத்து தெரிவிக்கப்பட்டது.
Post a Comment