கடன்பெற்ற அரசியல்வாதிகளினால், நெருக்கடியில் மக்கள்
அரச வங்கிகளில் கோடிக்கணக்கில் அமைச்சர்கள் கடன் பெற்றுள்ளதாக ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
ஹோமாகம பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
பலம் வாய்ந்த அமைச்சர் உட்பட முன்னாள் அமைச்சர்கள் பலர் அரச வங்கிகளில் 65000 கோடி ரூபாவிற்கும் அதிகமான பணத்தை கடன் வைத்துள்ளதாகவும் இதனால் நாட்டின் சாதாரண குடிமக்கள் வங்கிக்கடன் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அரசாங்கம் வரிகளை விதித்து சாதாரண மக்களை ஒடுக்கி வருவதாகவும் எதிர்காலத்தில் மேலும் இரண்டு வகையான வரிகளை நடைமுறைபடுத்துவதற்கான திட்டங்களை தயாரித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment