Header Ads



பிரிவுதான் முடிவு என தீர்மானித்தால்..?


எந்த ஒரு உறவானாலும் சேர்ந்த வாழும் போது ஒழுக்க மாண்புகள் இருப்பது போலவே பிரிந்து போகும் போதும் ஒழுக்க மாண்புகள் உள்ளன. 


தவிர்க்க முடியாத ஒரு காரணத்துக்காக எந்த ஒரு உறவையும் முறித்துக்கொள்ள நினைத்தால்  அழகாகவும், முறையாகவும் பிரிந்து போக கற்றுக்கொள்ளுங்கள்.


காலாகாலம் நெஞ்சங்களில் விதைத்து வைத்த பாச உணர்வுகளை கொடூரமாக பிடுங்கி எடுத்துச் செல்லலாதீர்கள். 


காரணம், பெயர்களும், முகம்களும் நெஞ்சங்களில் நிலைத்து நிற்பதை விட, நிகழ்வுகளும், சம்பவங்களும் தான் நீண்ட காலம் நெஞ்சங்களில் வாழப்போகின்றன. 


பிரிவுதான் முடிவு என தீர்மானித்தால்,   காயங்களை  கூட்டிவிட்டு பிரிந்து போகாதீர்கள். முடிந்தால் ஒரு அழகிய நினைவை விட்டுச் செல்லப் பழகுங்கள். 


மரியாதையாக பிரியும் முறை எதுவென கற்றுக்கொள்ளுங்கள். என்றோ ஒரு நாள் தஞ்சம் தந்த நெஞ்சங்களுக்கு மரியாதை செய்யத் தவராதீர்கள். 


நேற்று விரும்பிய உள்ளங்களை, இன்று நீங்கள் வெறுத்தாலும் நாளை அவர்கள் நோவினைப் படுவதை விரும்பாமல் இருப்பதே மனுதர்மமாகும். 


சேர்ந்து வாழ்ந்த போது இருந்த அழகும், அருமையும் பிரிந்து போகும் போதும் இருக்கட்டும். நிறைகளை ஞாபகம் கூறாவிட்டாலும் குறைகளை கூறித்திரியாதீர்கள். 


உங்களிடமும் குறைகள் இருந்திருக்கம் என்பதை மறந்து விடாதீர்கள். நலவுகளை நினைவு கூர்வதும் குறைகளை மூடி மறைப்பதும் மனிதப் புனிதர்களின் பண்புகள் என்பதை மறவாதீர்கள். 


✍ தமிழாக்கம் / imran farook

No comments

Powered by Blogger.