Header Ads



முஸ்லிம்களின் உரிமைகள் மீறப்பட்டு, கேவலமான செயலில் ஈடுபட்டனர்


கோவிட் பெருந்தொற்று காலத்தில் உலக உடன்பாட்டை மீறி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் முஸ்லிம்களை இலக்கு வைத்து இனவாத கொள்கையை முன்னெடுத்ததாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்றத்தின் இன்றைய (18.06.2024) அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,


கோவிட் காலத்தில் தகனமா அல்லது அடக்கமா என்ற பிரச்சினை தொடர்பாக உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் உலகின் பிற நாடுகளால் உலகளாவிய விதிமுறைகள், நடவடிக்கைகள் மற்றும் உலக ஒருமித்த கருத்துக்கள் நிலவி வந்தன.


இருந்த போதிலும், அதன் அடிப்படைகளில் முன்னோக்கி செல்லாது, தேசிய ரீதியாக நிபுணர் குழுவொன்றை நியமித்து அவர்களின் பரிந்துரை என்ற பெயரில் செயற்பட்டு, முஸ்லிம் மக்களின் உரிமைகள் மீறப்பட்டுள்ளது.


இறுதியில், கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கத்தில் முஸ்லிம் மக்களையும், இஸ்லாமிய மதத்தையும் குறிவைத்து தீவிர இனவாத மற்றும் தீவிர மதவாத நடவடிக்கைகள் முன்னெடுத்துச் செல்லப்பட்டன.


அவர்களின் கலாச்சார மற்றும் மத அடையாளங்களை அழிக்க வலுவான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதன் நீட்சியாகவே உலக சுகாதார ஸ்தாபனம் வேண்டாம் என்று கூறிய போதும் கேவலமான செயலில் ஈடுபட்டனர்” என தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.