Header Ads



இலங்கையணிக்கு என்ன நடந்தது..? அமெரிக்க கிரிக்கெட் நிறுவனம் ஐசிசியால் தடை - பாராளுமன்றத்தில் அறிவிப்பு



T20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை அணி எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராயப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.


இன்று (07) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில்,


இலங்கை கிரிக்கெட் அணிக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதிநிதி ஒருவர் நியமிக்கப்பட்டு அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டுள்ளார்.


விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் இலங்கை அணி, அயர்லாந்து அணி மற்றும் தென்னாப்பிரிக்க அணி 7 மணி நேரம் விமான நிலையத்தில் தவித்தனர். இது தொடர்பாக ஐசிசி-யிடம் இலங்கை கிரிக்கெட் ஏற்கனவே புகார் அளித்துள்ளது.


அதற்குக் காரணம், ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு விதமாக நடத்தப்பட்டதே.


அமெரிக்க கிரிக்கெட் நிறுவனமும் தற்போது ஐசிசியால் தடை செய்யப்பட்டுள்ளது. இப்படியான ஒரு சூழ்நிலையில் தான் ஐசிசி T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை அமெரிக்காவில் நடத்துகிறது.


2, 3 வாரங்களுக்கு முன்பே சொன்னோம்... கிரிக்கெட் அமைப்பின் பிரதிநிதியை அனுப்பி, அணிக்கு சிரமம் வராதபடி ஏற்பாடு செய்ய வேண்டும் என.


இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர்  சஜித் பிரேமதாச, ஐ.சி.சி.யின் அநீதிகளுக்கு எதிராக நாம் எழுந்து நிற்க வேண்டும் என சுட்டிக்காட்டினார்.

No comments

Powered by Blogger.