மிகச்சிறந்த பாதுகாவலன்
நாம் பகல்நேர சுற்றுப் பயணத்தின் பிறகு ஓய்வெடுக்கவென ஒரு மரத்தடியில் நாம் அமர்ந்திருந்தோம். திடீரென ஒரு சிட்டுக்குருவியின் அலறல் சத்தம் நம் கவனத்தை திசை திருப்பியது. அது ஏதோ ஒரு சிக்கலில் சிக்கிக்கொண்டுள்ளது என்பது மாத்திரம் தெளிவாக தெரிந்தது.
அருகிலிருந்த மரத்தின் உச்சியை சத்தமிட்டவாறு வட்டமிட்டுக் கொண்டிருந்தது.
நாமும் நெருங்கிச் சென்று பார்த்தோம். அதன் பிரச்சினைக்கான காரணம் நமக்கு புலப்பட்டது. ஒரு பெரிய பாம்பு அவைகளின் குஞ்சுகள் இருக்கும் கூட்டை நோக்கி ஊர்ந்து வந்து கொண்டிருந்தது.
ஆண் பறவை பதட்டத்தோடு ஏதோ ஒன்றை தேடுவது போல் தெரிந்தது. சில நொடிகள் கழித்து ஏதோ ஒரு சிறிய கிளையை சுமந்து வந்து கூட்டை மூடி மறைத்தது. இலைகுலைகளால் மறைப்பது ஒரு பாதுகாப்பாகுமா? முட்டாள்தனமான பாதுகாப்பு நடவடிக்கை அல்லவா? என நாம் நமக்குள் கேட்டுக்கொண்டோம். பிறகு இரண்டும் சேர்ந்து அருகில் இருந்த கிளையில் நின்றவாறு நடக்கப்போவதை அவதானித்தன. நாமும் அவதானித்தோம்.
பாம்பு கூட்டை நெருங்கியது. குஞ்சுகளின் கதை முடிந்துவிட்டது என்று நாம் நினைத்தோம். மூடப்பட்டிருந்த அந்த இலைகுலைகளுக்கு மத்தியில் தலையை நுழைவிக்க முற்பட்ட போது மின்சாரம் தக்கியது போல அல்லது பலாரென்று ஒரு அடி பட்டது போன்று பாம்பு பதறியபடி பின்வாங்கியது. கூட்டை விட்டும் ஓட்டம் எடுத்தது.
என்ன நடந்தது என்று நமக்கு புரியவில்லை. பின்னர் இரண்டும் தங்கள் குஞ்சுகளை காப்பாற்றிய குதூகலத்தில் இருந்ததை நாம் அவதானித்தோம். கூட்டுக்கு மேலே இருந்த அந்த கிளையை அகற்றி கீழே வீசியது.
அந்த கிளையை நாம் எடுத்துக்கொண்டு லத்தீன காடுகளில் உள்ள தாவரங்கள் பற்றிய நிபுணத்துவம் உள்ள தாவரவியலாளர் ஒருவரைச் சந்தித்து விபரம் கேட்டோம்.
அதை பரிசோதித்த அவர்: இந்த இலைகளில், அதன் வாசனையில் பாம்புகளைக் கொல்லும் நச்சுத் தன்மை இருப்பதாகவும், அதன் அருகில் பாம்புகள் நெருங்குவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
👉 பாம்புகள் அஞ்சும் கொடிய விஷம் இந்த இலைகளில் உள்ளது என்று சிட்டுக்குருவிக்கு கற்றுக்கொடுத்தது யார்?
👉 மண்ணிலும் விண்ணிலும் காட்டிலும் நாட்டிலும் நேர்த்தியான ஒரு நிர்வாகம் நிபுணத்தும் மிக்க ஒரு அரசனால் நிர்வாகிக்கப்படுகிறது.
👉 காட்டிலுள்ள பறவைகளுக்கு பாதுகாப்பு யுக்திகளை கற்றுக்கொடுத் அந்த இறைவன் உனக்கான பாதுகாப்பு வழிகளை கற்றுத்தராமல் இருப்பானா?
✍ தமிழாக்கம் / imran farook
Post a Comment