அன்பின் தம்பதிகளே...!
நெற்றியில் ஒரு முத்தம், நெஞ்சோடு ஒரு அரவணைப்பு, காதில் ஒரு காதல் வார்த்தை, முகம் பார்த்து ஒரு புன்சிரிப்பு என்பன தீராப் பிரச்சினைகள் தீர்க்கவல்ல அற்புதமான மருந்து மாத்திரைகளாகும், உடனடி நிவாரணம் தரும் ஒளடதங்களாகும்.
சில நொடி நேர சண்டைகளால் பன்னெடு காலம் கட்டிக்காத்த அன்பின் ஆலயத்தை தகரத்து விடாதீர்கள்.
இல்லாளியின் அழகாலும் இல்லத்தாளின் பணத்தாலும் நல்லதோர் இல்லற வாழ்வை கட்டியெழுப்ப முடியாது. பரஸ்பர காதலாலும் கவனிப்பாலும் மாத்திரமே அது சாத்தியமாகும்.
காலம் போகப் போக பெண்ணின் அழகு மங்கிவிடும். ஆணின் பலம் குன்றிவிடும். அன்பும் பாசமும் மாத்திரமே தங்கிவிடும்.
ஒரு ஆணைப் பொறுத்தவரையில் அவன் கைபிடித்த மனைவி தான் அவனது பொறுப்பாகும். ஒரு பெண்ணைப் பொறுத்தவரையில் அவள் கைபிடித்த கணவன் தான் அவளது பாதுகாப்பாகும்.
மன்னிப்பும், விட்டுக்கொடுப்பும்தான் காதல் ஓடம் ஓடப் பயன்படுத்தப்படும் துடுப்புக்களாகும்.
✍ தமிழாக்கம் / imran farook
Post a Comment