திருட்டுப் பணம்தான்
திருட்டுத் தொழிலை ஊரிலுள்ள குடுறகாரன், குடிகாரன் மாத்திரம்தான் செய்கிறான்' என்று நாம் தப்பாக நினைத்துக் கொண்டிருக்கின்றோம்.
நோயாளிக்கு சரிவர சிகிச்சை அளிக்காமல் மருத்தவர் எடுக்கும் கட்டணம் திருட்டுப் பணம்தான்.
மாணவர்களுக்கு சரிவர கற்றுக் கொடுக்காமல் ஆசிரியர் எடுக்கும் சம்பளம் திருட்டுப் பணம்தான்.
நியாயமற்ற வழக்குக்காக வாதாடி, வழக்கறிஞர் எடுக்கும் கட்டணமும் திருட்டுப் பணம்தான்.
கலப்பட பொருட்களை விற்று, வியாபாரி சம்பாதித்த பணமும் திருட்டுப் பணம்தான்.
வஞ்சகம் செய்து, தரகர் எடுக்கும் விற்பனை பங்கு திருட்டுப் பணம்தான்.
சரிவர பணி செய்யாமல் மாத முடிவில் சம்பளம் எடுக்கும் ஊழியரின் சம்பளமும் திருட்டுப் பணம்தான்.
✍ முஸ்தபா மஹ்மூத்
✍ தமிழாக்கம் / imran farook
Post a Comment