Header Ads



நரேந்திர மோதி, அமித்ஷா வேண்டாம் - ராகுல் காந்தி உருக்கம்


காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்டோர் மக்களவை தேர்தல் முடிவுகள் குறித்து கட்சி தலைமையகத்தில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.


அப்போது பேசிய ராகுல் காந்தி, 


“அரசியலமைப்பு சட்டத்தைக் காப்பாற்றுவதே எங்களின் போராட்டமாக இருந்தது. மக்கள், கூட்டணி கட்சியினர், காங்கிரஸ் தலைவர்கள், கட்சி தொண்டர்கள் ஆகியோருக்கு மனதின் ஆழத்திலிருந்து நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.


மேலும், “பங்குச்சந்தையில் அதானி நிறுவன பங்குகளை நீங்கள் கவனிக்க வேண்டும். மோதியை மக்கள் அதானியுடன் நேரடியாக இணைத்துப் பார்க்கின்றனர். இருவருக்கும் ஊழல்களில் நேரடி உறவு உள்ளது. எங்களுக்கு நரேந்திர மோதி, அமித் ஷா வேண்டாம் என மக்கள் கூறுவதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன” என்றார்.


“இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளை நாங்கள் மதிக்கிறோம். அவர்களின் விருப்பங்களை நாங்களை கருத்தில் கொண்டோம். நாங்கள் ஒருங்கிணைந்து தேர்தலில் போட்டியிட்டோம்.


தொழிலாளர்கள், விவசாயிகள், தலித் மக்கள், பழங்குடியினர் இந்த நாட்டின் அரசியலமைப்பை காப்பாற்றியுள்ளனர்” என்றார் ராகுல் காந்தி.

No comments

Powered by Blogger.