இஸ்ரேலிய இராணுவத்தினருடைய இழப்புகள் குறித்து வெளியாகியுள்ள புதிய தகவல்கள்
காசா போர் தொடங்கியதில் இருந்து 3,703 இஸ்ரேலிய வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும், என்கிளேவில் தரைவழி தாக்குதலில் 1,878 பேர் காயமடைந்துள்ளதாகவும் இஸ்ரேல் ராணுவம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளதாக அரபு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாலஸ்தீனிய எதிர்ப்பு குழுக்களுடனான சண்டையில் காயமடைந்த 254 இஸ்ரேலிய அதிகாரிகள் மற்றும் வீரர்கள் இன்னும் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களில் 32 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் இஸ்ரேலிய இராணுவம் மேலும் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய ஊடகங்களின்படி, போரில் சியோனிச உயிரிழப்புகள் பற்றிய அறிக்கைகள் கடுமையாக தணிக்கை செய்யப்பட்டுள்ளன.
Post a Comment