மூளையை பரிசோதனைக்குட்படுத்த வேண்டும்
கொழும்பில் தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
ஜனாதிபதித் தேர்தலை பிற்போட முடியும் என எவரேனும் கூறினால், அவர்களின் மூளையை பரிசோதனைக்குட்படுத்தி பார்க்க வேண்டும். எக்காரணமாக இருந்தாலும் தேர்தலை பிற்போடுவது என்பது தவறு.
அத்துடன், தேர்தலுக்கான முதற்கட்ட வேலைத்திட்டங்களை தற்போது தேர்தல்கள் ஆணைக்குழு முன்னெடுத்துள்ளது. அதுகுறித்து நாம் ஆராயப்போவதில்லை என்பதோடு அதற்கான உரிமையும் எமக்கு இல்லை.
எனினும், தேர்தல்கள் ஆணைக்குழு உண்மையாகவும் நேர்மையாகவும் செயற்படும் என நாம் நம்புகின்றோம்.
அதேவேளை, தற்போது மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்படுவதை சில கட்சிகள் தமக்கு சாதகமாக பயன்படுத்தி வாக்கு வேட்டையில் ஈடுபடுவதைத் தடுக்கவேண்டும்.
மேலும், தேர்தல் காலத்தில் இவ்வாறான அபிவிருத்திகள் கட்சி சார்ந்து முன்னெடுக்கப்படுவதை கண்காணிப்பு அமைப்புகள் கவனத்தில் எடுக்கவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
Post a Comment